யாழ் மாநகர சபையின் பட்ஜட் 03 வாக்குகளால் தோற்கடிப்பு

TNA முதல்வர் ஆர்னோல்ட் பதவியிழக்கிறார்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தனது பதவியை இழக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம், மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்டினால் கடந்த 2ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அந்தச் சமர்ப்பணத்தின்போது, அதற்கு ஆதரவாக 19 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டு முதலாவது வாசிப்பு தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையிலறு (புதன்கிழமை) காலை இடம்பெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு இடம்பெற்றது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு – செலவுத் திட்டத்திக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு – செலவுத் திட்டத்திக்கு எதிராக வாக்களித்தனர்.

இதனால் யாழ் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டம் தேற்கடிக்கப்பட்டதன் காரணமாக 14 நாட்களுக்குள் யாழ். மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற வேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும்.

யாழ். விசேட, பருத்தித்துறை நிருபர்

 

 


Add new comment

Or log in with...