LPLT20: கன்னி கிண்ணத்தை கைப்பற்றியது ஜப்னா ஸ்டேல்லியன்ஸ்

LPLT20: கன்னி கிண்ணத்தை கைப்பற்றியது ஜப்னா ஸ்டேல்லியன்ஸ்-LPLT20 Inaugural Series-Galle GladiatorsVJaffna Stallions-JS Won by 53 Runs-Won the Series

- தொடரின் நாயகன் வணிந்து ஹசரங்க
- ஆட்ட நாயகன் சுஐப் மலிக்
- தொடரின் வளர்ந்து வரும் வீரர் தனஞ்சய லக்‌ஷான்

லங்கா ப்ரீமியர் லீக் ரி20 கன்னித் தொடரை வென்று, கிண்ணத்தை வாகை சூடியது ஜப்னா ஸ்டேல்லியன்ஸ் அணி.

இன்று (16) அம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் இடம்பெற்ற, இத்தொடரின் இறுதிப் போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை 53 ஓட்டங்களால் தோற்கடித்ததன் மூலம், ஜப்னா ஸ்டேல்லியன்ஸ் அணி இத்தொடரை தன்வசப்படுத்தியது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா ஸ்டேல்லியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அவ்வணி சார்பில், சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சுஐப் மலிக் 35 பந்துகளில் 46 ஒட்டங்களை பெற்றார்.

LPLT20: கன்னி கிண்ணத்தை கைப்பற்றியது ஜப்னா ஸ்டேல்லியன்ஸ்-LPLT20 Inaugural Series-Galle GladiatorsVJaffna Stallions-JS Won by 53 Runs-Won the Series

அணியின் தலைவர் திஸர பெரேரா, ஆட்டமிழக்காது 14 பந்துகளில் 39 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 20 பந்துகளில் 33 ஓட்டங்களையம் பெற்றுக் கொடுத்தனர்.

ஜப்னா ஸ்டேல்லியன்ஸ் அணி சார்பில், பந்துவீச்சில் தனஞ்சய லக்ஷான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சுஐப் மலிக், தனஞ்சய டி சில்வா, ஜோன்சன் சார்ள்ஸ் (மே.இ.தீவுகள்) ஆகியோரின் விக்கெட்டுகளையே அவர் கைப்பற்றியிருந்தார்.

LPLT20: கன்னி கிண்ணத்தை கைப்பற்றியது ஜப்னா ஸ்டேல்லியன்ஸ்-LPLT20 Inaugural Series-Galle GladiatorsVJaffna Stallions-JS Won by 53 Runs-Won the Series

மொஹம்மட ஆமிர், சஹன் ஆரச்சிகே, லக்ஸான் சந்தகன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.

அதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த ஜப்னா ஸ்டேல்லியன்ஸ் அணி, ஓவருக்கு 9.4 எனும் சராசரியுடன், 188 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 189 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய, பானுக ராஜபக்‌ஷ தலைமையிலான கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

சிறப்பாக விளையாடிய அணியின் தலைவர் பானுக ராஜபக்‌ஷ 17 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றார்.

பாகிஸ்தான் நாட்டு வீரரான விக்கெட் காப்பாளர் அஷாம் கான் 17 பந்துகளில் 36 ஓட்டங்களையும், சஹன் ஆரச்சிகே 18 பந்துகளில் 17 ஓட்டங்களையும், ஷெஹான் ஜயசூரிய 25 பந்துகளில் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஏனைய வீரர்கள் 10 இற்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர்.

முதல் ஓவரின் 3ஆவது பந்திலேயே ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான, ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸரதுல்லாஹ் சஸாய் எவ்வித ஓட்டங்களும் பெறாமல் ஆட்டமிழந்ததோடு, மறுபுறத்தில் களமிறங்கிய தனுஷ்க குணதிலக ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார்.

2ஆவது விக்கெட்டிற்காக களமிறங்கிய பாகிஸ்தானிய வீரர் அஹ்சன் அலி 6 ஒட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய அணியின் தலைவர் பானுக ராஜபக்‌ஷ சற்று ஆறுதலளித்ததோடு, அவருடன் இணைந்த ஷெஹான் ஜயசூரிய 15 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து அணியை திடீர் சரிவிலிருந்து சற்று மீட்டனர்.

ஆயினும் சிறப்பாக பந்து வீசிய ஜப்னா ஸ்டேல்லியன்ஸ் அணி சார்பில், சுஐப் மலிக், உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தென்னாபிரிக்க வீரர் துஆன் ஒலிவியர், சுரங்க லக்மால், தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தலா 3 ஓவர்கள் பந்து வீசிய சுரங்க லக்மால் மற்றும் சுஐப் மலிக் ஆகியோர் முறையே 12 மற்றும் 13 ஒட்டங்களையே வழங்கியிருந்தனர்.

அந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

அதன் அடிப்படையில், ஜப்னா ஸ்டேல்லியன்ஸ் அணி 53 ஓட்டங்களால் இறுதிப் போட்டியை வென்று, லங்கா ப்ரீமியர் லீக் ரி20 தொடரின் கன்னித் தொடரை தன்வசமாக்கிக் கொண்டது.

LPLT20: கன்னி கிண்ணத்தை கைப்பற்றியது ஜப்னா ஸ்டேல்லியன்ஸ்-LPLT20 Inaugural Series-Galle GladiatorsVJaffna Stallions-JS Won by 53 Runs-Won the Series

போட்டியின் நாயகனாக, சுஐப் மலிக் தெரிவு செய்யப்பட்டார்.

தொடரின் வளர்ந்து வரும் வீரராக தனஞ்சய லக்‌ஷான் தெரிவானார்.

தொடரின் நாயகனாக, வணிந்து ஹசரங்க தெரிவு செய்யப்பட்டார்.

தொடர் நிலவரம்
லீக் சுற்று

5 அணிகள் மோதிய இத்தொடரில் லீக் சுற்றில் கண்டி டஸ்கர்ஸ் அணி 8 போட்டிகளில் 2 போட்டிகளை மாத்திரம் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் வெளியேறியது
களம்பு கிங்ஸ்: 8 போட்டிகளில் 6 வெற்றி - 12 புள்ளிகள்
தம்புள்ள வைகிங்ஸ்: 8 போட்டிகளில் 5 வெற்றி (ஒன்று முடிவில்லை) - 10 புள்ளிகள்
ஜப்னா ஸ்டேல்லியன்ஸ்: 8 போட்டிளில் 4 வெற்றி (ஒன்று முடிவில்லை) - 8 புள்ளிகள்
கோல் கிளேடியேட்டர்ஸ்: 8 போட்டிகளில் 2 வெற்றி - 4 புள்ளிகள் (நிகர சராசரி கண்டி டஸ்கர்ஸ் இலும் அதிகம்)

அரையிறுதிகள்
அரையிறுதி-1

களம்பு கிங்ஸ் 150/9 (20.0)
கோல் கிளேடியேட்டர்ஸ் 151/8 (19.5)
கோல் கிளேடியேட்டர்ஸ் 2 விக்கெட்டுகளால் வெற்றி

அரையிறுதி-2
ஜப்னா ஸ்டேல்லியன்ஸ் 165/9 (20.0)
தம்புள்ள வைகிங்ஸ் 128 (19.1)
ஜப்னா ஸ்டேல்லியன்ஸ் 37 ஓட்டங்களால் வெற்றி

இறுதிப்போட்டி
ஜப்னா ஸ்டேல்லியன்ஸ் 188/6 (20.0)
கோல் கிளேடியேட்டர்ஸ் 135/9 (20.0)
ஜப்னா ஸ்டேல்லியன்ஸ் 53 ஓட்டங்களால் வெற்றி


Add new comment

Or log in with...