இரசிகர்களை உற்சாகப்படுத்த இப்பண்டிகையில் OPPO வின் மறக்கமுடியாத இரவு | தினகரன்

இரசிகர்களை உற்சாகப்படுத்த இப்பண்டிகையில் OPPO வின் மறக்கமுடியாத இரவு

இரசிகர்களை உற்சாகப்படுத்த பண்டிகைக் காலத்தில் மறக்கமுடியாத இரவுக்கு தயாராகும் OPPO-OPPO O Fans Festival

புதுமையான ஸ்மார்ட் போன்கள் மற்றும் சாதனங்களுக்கான உலகளாவிய தெரிவான OPPO, தனது வாடிக்கையாளர்களுக்காக, ‘O FAN FEST’ எனும் நிகழ்வை திட்டமிட்டுள்ளதோடு, இதன் ஒரு பகுதியாக அனைத்து இலங்கையர்களுக்கும் புத்துயிரளிக்கும் வேடிக்கை, விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுள்ளது. இவ்விடுமுறை காலத்துடன் ஒட்டியதாக, இந்த டிசம்பர் மாதம் முழுவதும் பல்வேறு தயாரிப்புகளுக்கு அற்புதமான தள்ளுபடிகளை வழங்குகிறது.

‘O FAN FEST’ இன்போது வழங்கப்படும் பல்வேறு தள்ளுபடிகளையும் தாண்டி, இந்நிகழ்வு தன்னகத்தே பல்வேறு அற்புதமான சலுகைகளையும் கொண்டுள்ளது. பாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும், தரக்குறியீட்டின் தனித்துவமான முன்மொழிவுக்கு ஏற்ப, இளம் தலைமுறையினரின் மனதை வென்ற பிரபல்யமான கலைஞர்களினாலும் இந்நிகழ்வுகள் யாவும் சிறப்பாக அமையவுள்ளது.

நத்தார் பண்டிகையை அண்மித்ததாக திட்டமிடப்பட்டுள்ள இந்நிகழ்வில், பிரபல பாடகி உமாரியா சின்ஹவம்ச மற்றும் வஸ்தி புகழ் பிரபல யூடூபர் அனுஷ்க உதான ஆகிய சமூக ஊடகத்தில் பல மில்லினியன் இரசிகர்களைக் கொண்ட, இரு கலைஞர்கள் பங்கேற்கும், இரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிகழ்வாக அமையவுள்ளது.

இந்நிகழ்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் அல்லது சமூக ஊடகங்களில் #OFansFestival2020 எனும் ஹேஷ்டேக்குடன், சமூக வலைத்தளங்களில் இந்நிகழ்வு தொடர்பான கருத்துகளை இடுகைகளாக இடுவதன் மூலம், பார்வையிடுவோர் அற்புதமான பரிசுகளையும் வெல்லலாம்.

இந்நிகழ்வுகள் யாவும் OPPO Sri Lanka வின் உத்தியோகபூர்வ சமூக ஊடக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்பதால் இரசிகர்கள் நாட்டின் அல்லது உலகின் எந்தவொரு பகுதியிலிருந்தும் இதில் பங்கேற்கலாம் என்பதோடு, நேரடியாக இணைப்பையும் ஏற்படுத்தலாம்.

OPPO Sri Lanka பற்றி
முன்னணி ஸ்மார்ட்போன் நாமமான OPPO, அதன் முதலாவது ஸ்மார்ட் போனான “Smiley Face” (“ஸ்மைலி பேஸ்”) ஐ 2018 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது. இன்று, OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு Find மற்றும் R தொடர்களின் கீழான பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது, ColorOS இயங்குதளம், அதே போன்று OPPO Cloud மற்றும் OPPO + போன்ற இணைய சேவைகள். OPPO, 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் இயங்குகிறது. உலகளாவிய ரீதியில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 4 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அத்துடன் லண்டனில் ஒரு சர்வதேச வடிவமைப்பு மையத்தையும் கொண்டுள்ளது. OPPO இன் 40,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்வியலை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர். 2015 இல், இலங்கையில் செல்பி மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் நுண்ணறிவு மென்பொருள்களுக்காக, OPPO அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதோடு, அதன் முதன்மை ‘F’ தொடர் மற்றும் பிரபலமான Reno தொடர் மூலம் பல மொடல்கள் மூலம், பரந்துபட்ட நுகர்வோர் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது. OPPO Sri Lanka ஆனது, அபான்ஸ், சிங்ககிரி, டயலொக், டாராஸ் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட OPPO விற்பனையாளர்களுடன் வலுவான கூட்டிணைப்பைக் கொண்டுள்ளதுடன், அவை நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களைச் சென்றடைய OPPO விற்கு உதவுகின்றன.


Add new comment

Or log in with...