OPPO இரசிகர் விழா: இந்த விடுமுறை காலத்தில் பல்வேறு தள்ளுபடிகள் | தினகரன்

OPPO இரசிகர் விழா: இந்த விடுமுறை காலத்தில் பல்வேறு தள்ளுபடிகள்

OPPO இரசிகர் விழா: இந்த விடுமுறை காலத்தில் பல்வேறு தள்ளுபடிகள்-OPPO Fan Fest: Discounts Galore This Holiday Season

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் புதுமையான கையடக்கத் தொலைபேசி தரக்குறியீடான OPPO, எதிர்வரும் விடுமுறை காலத்துடன் இணைந்ததாக, தங்களது பருவகால சலுகையான ‘O Fans Festival’ திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் பல்வேறு தயாரிப்புகளுக்கு அற்புதமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை இந்த டிசம்பர் மாதத்தில் வழங்குகிறது.

இந்நிகழ்வில் அற்புதமான சலுகைகள் மற்றும் பாடல், நடனம் மற்றும் பல அம்சங்களைக் கொண்ட மாலைப் பொழுதாக ‘O Fans Night’ இடம்பெறவுள்ளது. இது தரக் குறியீட்டின் தனித்துவமான முன்மொழிவுக்கு ஏற்ப இளம் தலைமுறையினரால் மறுக்கமுடியாத விருப்பத்திற்குரிய அம்சமாகவும், பிரபலமான கலைஞர்களினாலும் சிறப்பாக அமையவுள்ளது.

O Fans Fest இன் போது, OPPO F17 இன் ஒவ்வொரு கொள்வனவின்போதும், OPPO Enco Free W11 ஹெட்ஃபோன்களுக்கு 50% வரை விலைத் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது..

இன்றுவரை தரக்குறியீட்டின் மிகவும் ஸ்டைலான மாடல்களில் ஒன்றான OPPO F17, இந்த ஆண்டின் பிற்பகுதியில் சமூக ஊடகத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. இக்கைடயக்கத் தொலைபேசியானது, இலகுரகமானதும் தோல் போன்ற வெளிப்புற அமைப்பையும் கொண்டதாக அமைந்துள்ளது. அது தவிர 30W VOOC Flash Charge, சமூக ஊடக ஆர்வலர்களுக்காக வடிவமைக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் சிறந்த செயல்பாட்டிற்கான Hyper Boost 2.1, கேமிங்கின் போதான பிரச்சினைகளின்றி இயங்கும் வகையில் அமைந்துள்ளது.

W11 Enco Free ஹெட்போன் ஆனது, அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இரசிகர்களின் விருப்பமாக அமைந்துள்ளதோடு, உயர் தரமான, இணையற்ற ஒலி வெளியீட்டை வழங்கும் அம்சங்களின் வகைப்படுத்தலைக் கொண்டுள்ளது. இது தொழில்நுட்பம் மற்றும் அழகியல் ஆகியவற்றின் தடையற்ற கலவையை வழங்குகிறது. அது தவிர சமிக்ஞை குறுக்கீட்டைத் தடுக்கும் வகையிலான Bluetooth 5.0 சிப், 8mm dynamic drivers, நேர்த்தியான காது இணைப்பு வடிவமைப்பு, தூசி மற்றும் தண்ணீருக்கு எதிர்ப்புத் தன்மை ஆகிய அம்சங்கள் அடங்குகின்றன..

OPPO ஶ்ரீ லங்காவின் தலைவர் பொப் லி இது தொடர்பில் தெரிவிக்கையில், "புத்தாண்டைக் கருத்தில் கொண்டு எமது வாடிக்கையாளர்கள், அவர்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த தள்ளுபடியை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது நிலவும் தொற்றுநோய் நிலைமையிலும், 2020 ஒரு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளதுடன், இந்த சலுகைகளானது, எமது இலங்கை வாடிக்கையாளர்கள் தளத்தினருக்கு நன்றியைத் தெரிவிப்பதற்கான ஒரு வழியாக அமைவதுடன், இது முழு ஆசியாவிலும் மிகவும் விவேகமான மற்றும் துடிப்பான ஒரு விடயமாக அமையவுள்ளது. அத்துடன், தொழில்நுட்பம் மற்றும் அழகியல் எனும் இரு உலகங்களுக்கும் ஏற்ற வகையில், நாங்கள் உங்களுக்கு சேவை செய்ய மற்றொரு வருடத்தை எதிர்பார்த்து நிற்கிறோம்.” என அவர் தெரிவித்தார்.

இச்சலுகைகளில் காணப்படும் ஏனைய பொருட்களில்  Enco W15 ஹெட்போனும் அடங்குகிறது. இது பல முன்னோடியான சாதனங்களைப் போலவே, இளைஞர்களை மனதில் கொண்டு ஸ்டைலான மற்றும் செயல்பாட்டுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கறுப்பு மற்றும் வெள்ளி நிறங்களில் (Black & Silver Mist) கிடைக்கும் OPPO Watch ஆனது, பயிற்சியாளர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்வோரை கருத்திற்கொண்டு, அவர்களது குறிக்கோள்களுக்கு ஏற்ற ஒரு சிறந்த ஸ்மார்ட் கைக்கடிகாரமாகும். இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரமானது, குறிப்பாக 2021 இற்காக தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் சுறுசுறுப்பாகவும் இருக்கவும் விரும்பும் எவருக்கும் ஒரு சிறந்த முதலீடாகும் என்பதில் ஐயமில்லை.

இத்தயாரிப்புகள் பற்றிய மேலதிக தகவல்களை OPPO Sri Lanka வலைத்தளம் மற்றும் அதன் சமூக ஊடக வலைத்தளங்கள் மூலம் பெறலாம்.

OPPO Sri Lanka பற்றி
முன்னணி ஸ்மார்ட்போன் நாமமான OPPO, அதன் முதலாவது ஸ்மார்ட் போனான “Smiley Face” (“ஸ்மைலி பேஸ்”) ஐ 2018 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது. இன்று, OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு Find மற்றும் R தொடர்களின் கீழான பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது, ColorOS இயங்குதளம், அதே போன்று OPPO Cloud மற்றும் OPPO + போன்ற இணைய சேவைகள். OPPO, 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் இயங்குகிறது. உலகளாவிய ரீதியில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 4 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அத்துடன் லண்டனில் ஒரு சர்வதேச வடிவமைப்பு மையத்தையும் கொண்டுள்ளது. OPPO இன் 40,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்வியலை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர். 2015 இல், இலங்கையில் செல்பி மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் நுண்ணறிவு மென்பொருள்களுக்காக, OPPO அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதோடு, அதன் முதன்மை ‘F’ தொடர் மற்றும் பிரபலமான Reno தொடர் மூலம் பல மொடல்கள் மூலம், பரந்துபட்ட நுகர்வோர் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது. OPPO Sri Lanka ஆனது, அபான்ஸ், சிங்ககிரி, டயலொக், டாராஸ் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட OPPO விற்பனையாளர்களுடன் வலுவான கூட்டிணைப்பைக் கொண்டுள்ளதுடன், அவை நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களைச் சென்றடைய OPPO விற்கு உதவுகின்றன.


Add new comment

Or log in with...