- திருமலை மொரவெவயில் சம்பவம்
திருகோணமலை- மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொம்பன் யானையொன்று காயப்பட்ட நிலையில் விழுந்து கிடப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு (09) இடம்பெற்றுள்ளது
மொரவெவ-ஆறாம் வாய்க்கால்- நவநகர குளத்துக்கு அருகில் 4 வயதுடைய கொம்பன் யானை காயப்பட்ட நிலையில் விழுந்துள்ளதாகவும், காயம் ஏற்படுவதற்கான காரணம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
இந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிரித்தலை பகுதியிலிருந்து வைத்தியர்கள் வர உள்ளதாகவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மொரவெவ பிரதேச பொறுப்பாளர் ஜகத் தசநாயக்க தெரிவித்தார்.
ஆனாலும் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் மக்கள் இதனால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ரொட்டவெவ குரூப் நிருபர்
Add new comment