Wednesday, December 2, 2020 - 12:44pm
இராஜாங்க அமைச்சர், லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (02) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர், புதிய அமைச்சை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
லொஹான் ரத்வத்த, இரத்தினக்கல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment