செர்பியா, மொன்டினிக்ரோ தூதுவர்கள் வெளியேற்றம்

ஒரு நூற்றாண்டுக்கு மேல் நீடிக்கும் வரலாற்றுப் பிரச்சினை ஒன்று காரணமாக மொன்டினிக்ரோ மற்றும் செர்பிய நாடுகள் அடுத்த நாட்டின் தூதுவர்களை பரஸ்பரம் வெளியேற்றியுள்ளன.

1918ஆம் ஆண்டு சேர்பியாவுடன் இணையும் மொன்டினிக்ரோ நிர்வாகத்தின் முடிவு ஒரு ‘விடுதலையாகும்’ என்று மொன்டினிக்ரோவுக்கான செர்பிய தூதுவர் விளாடிமிர் பொசோவிக் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து அவர் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக குறிப்பிட்ட மொன்டினிக்ரோ அவர் நாட்டை விட்டு வெளியேற 72 மணி நேர கெடு விதித்தது. தொடர்ந்து செர்பியாவுக்கான மொன்டினிக்ரோ தூதுவரும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

சேர்பியா, குரோசியா மற்றும் ஸ்வேனிஸ் குடியரசின் ஓர் ஆங்கமாக மொன்டினிக்ரோ இணையும் பிரகடனத்தை அந்நாட்டு பாராளுமன்றம் 1918 இல் வெளியிட்டது. இது பின்னர் யுகோஸ்லாவியாவாக அறிவிக்கப்பட்டது. எனினும் 2006 ஆம் ஆண்டு மொன்டினிக்ரோ தனி நாடாக சுதந்தரத்தை அறிவித்தது.

 


Add new comment

Or log in with...