பொலிஸ் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்

தீய நோக்கத்திற்காக பொலிஸரை படம்பிடிப்பதை குற்றமாக்கும் சட்டமூலம் ஒன்றை எதிர்த்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் மீது பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கற்கள் மற்றும் தீப்பந்தங்களை எறிந்ததை அடுத்து மோதல் ஏற்பட்டுள்ளது. கார்கள் மற்றும் வீதியோரத் திரைகள் தீவைக்கப்பட்டிருப்பதோடு பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சட்டமூலம் பேச்சுச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று குறிப்பிடும் எதிர்ப்பாளர்கள் பொலிஸ் கொடுமைகளை ஆவணப்படுத்துவதை தடுப்பதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த சட்டம் இணையதள முறைகேடுகளில் இருந்து பொலிஸாரை பாதுகாக்க உதவும் என்று அரசு குறிப்பிடுகிறது.

இதற்கு எதிராக கடந்த சனிக்கிழமை போர்டியுன்ஸ், லிலி, மொனட்பில்லர், நன்டஸ் மற்றும் பிரான்ஸின் மேலும் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.


Add new comment

Or log in with...