பத்ரகாளியம்மன் ஆலய ஆலமரத்தில் அம்மன் திருவுருவம் தோன்றி அதிசயம் | தினகரன்

பத்ரகாளியம்மன் ஆலய ஆலமரத்தில் அம்மன் திருவுருவம் தோன்றி அதிசயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றில் அம்மனின் திருவுருவம் நேற்று முன்தினம் 28ஆம் திகதி முதல் தெரிவதால் பக்தர்கள் படையெடுத்து வந்து தரிசித்த செல்வதை காண முடிகின்றது.

குறித்த ஆலயத்திலுள்ள எண்பது வருடம் பழமைவாய்ந்த ஆலமரத்தின் விழுதில் அம்மனின் உருவம் போன்ற ஒன்று காட்சி அளிப்பதைத் தொடர்ந்து மக்கள் அங்கு வருவதை காண முடிகிறது

குறித்த இடத்திற்கு வரும் பக்தர்கள் வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருவதையும் பூசைகள் நடத்துவதையும் காணக்கூடியதாக இருந்தது. நாட்டில் தற்போது அசாதாரண சூழ்நிலையும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அம்மாள் உருவம் தோன்றியதால் ஏதும் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இதன் காரணமாக மக்கள் மிகுந்த பயத்துடன் குறித்த உருவச்சிலையும் ஆலயத்திலுள்ள அம்பாளையும் வழிபட்டு வருவதைக் காணமுடிகின்றது.

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அம்மாள் உருவம் தோன்றியதையடுத்து ஆலயத்தின் பிரதம குரு சத்திய புவேனேஸ்வர சிவாச்சாரியார் விஷேட பூஜையை நடாத்தி வைத்தார்.

கல்குடா தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...