பயங்கரவாத தடை ஒழிப்பு; சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம் | தினகரன்

பயங்கரவாத தடை ஒழிப்பு; சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம்

- பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண

பயங்கரவாதத் தடை மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்தல் தொடர்பாக தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டங்கள் திருத்தத்துக்கு உட்படுத்தப்பட வேண்டுமென ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியுள்ள பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சட்டத் துறைக்குப் பொறுப்பாகவுள்ள பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண, ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளதுடன் அதன்போது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத சட்டம் தொடர்பான சட்ட மூலம் தொடர்பில் அங்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் கைது செய்யப்படும் சந்தேக நபர்களை தடுத்து வைக்கும் உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் பொலீஸ் துறைக்கு வழங்கப்படவேண்டும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் ஊடாக அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.

அதேவேளை பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் குறைந்தது ஆறு மாதங்களாவது பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...