கொரோனா தொற்று; கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது | தினகரன்

கொரோனா தொற்று; கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது

சிறைச்சாலைகளில் நேற்றைய தினமும் 187 சிறைக்கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான சிறைக் கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை நேற்றைய தினம் கண்டி பழைய போகம்பர சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற நான்கு கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவர்கள் நால்வரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டு மீண்டும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. அத்துடன் கண்டி போகம்பரை சிறைச்சாலையில் இதுவரை 313 சிறைக்கைதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...