பழைய மெனிங் சந்தை, 4ஆம், 5ஆம் குறுக்குத் தெருக்களுக்கு பூட்டு | தினகரன்

பழைய மெனிங் சந்தை, 4ஆம், 5ஆம் குறுக்குத் தெருக்களுக்கு பூட்டு

பழைய மெனிங் சந்தை, 4ஆம், 5ஆம் குறுக்குத் தெருக்களுக்கு பூட்டு-Pettah-Manning Market-4th Cross Street-5th Cross Street Closed

நாளை (30) முதல் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பிரதேசம் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளது.

ஆயினும் பழைய மெனிங் சந்தை, 4ஆவது மற்றும் 5ஆவது குறுக்குத் தெருக்களில் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்படாது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று (29) பொலிஸ் தலைமையகத்தில் இது தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புறக்கோடையில் உள்ள பழைய மெனிங் சந்தைக்கு பதிலாக, அண்மையில் பேலியகொடையில் புதிய மெனிங் சந்தை திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாளைய தினம் விடுவிக்கப்படும் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்


Add new comment

Or log in with...