ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி சோதனைகளில் தவறு | தினகரன்

ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி சோதனைகளில் தவறு

மீண்டும் சோதனைக்கு முடிவு

அஸ்ட்ராசெனகா மருந்தாக்க நிறுவனமும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த கொவிட்–19 தடுப்பு மருந்துக்கான சோதனையில் தவறு நேர்ந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளன.

அதனால், மருந்துக்கான சோதனைகளை மேலும் ஒரு முறை நடத்த அவை திட்டமிடுகின்றன.

தடுப்புமருந்தை ஒருமுறை செலுத்தினாலே அதன் நோய்த்தடுப்பு ஆற்றல் 70 வீதமாக இருக்கும் என்று கடந்த திங்கட்கிழமை அஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும் பாதியளவு மருந்தை முதலில் செலுத்திவிட்டு, பின்னர் முழுவதுமாக ஒருமுறை செலுத்தினால், அதன் தடுப்புசக்தி 90 வீதமாக பதிவானதாகக் கூறப்பட்டது. ஆனால், சோதனையில் கலந்துகொண்டவர்களில் சிலருக்குத் தவறுதலாகப் பாதியளவு மருந்து மட்டுமே செலுத்தப்பட்ட விபரம் வெளியிடப்படவில்லை.

அவர்களில் சிலரை இரண்டாவது குழுவாக ஆய்வாளர்கள் பிரித்து, தடுப்புமருந்தை முழுமையாகச் செலுத்தி சோதித்தனர். அப்போது, மருந்தின் நோய்த்தடுப்பு ஆற்றல் 90 வீதமாக பதிவானது. குறைவான அளவு தடுப்புமருந்து செலுத்தப்பட்டதால், நோய்த்தடுப்பு ஆற்றல் எப்படி அதிகரித்தது என்பதைக் கண்டறியும் பணிகளை அஸ்ட்ராசெனகா நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

மருந்துகளில் பிழை ஒரு ஒப்பந்தக்காரரால் ஏற்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்டவுடன் கட்டுப்பாட்டாளர்களுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பூசியை வெவ்வேறு அளவுகளில் தொடர்ந்து பரிசோதிக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டதாக அவர் கூறினார். சராசரியாக கொரோனாவைத் தடுப்பதில், அதன்  மருத்துவ பரிசோதனைகள் இங்கிலாந்து மற்றும் பிரேசிலில் நடத்தப்பட்டன.

அதற்கு மேலும் ஒரு துரிதமான சோதனையை நடத்தவுள்ளதாய் அஸ்ட்ராசெனகா கூறியது. 95 வீதம் தடுப்புச்சக்தியைக் கொண்டிருப்பதாய்க் கூறப்படும் பைசர், மொடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளைக் காட்டிலும் அஸ்ட்ராசெனகாவின் மருந்து மலிவானது.


Add new comment

Or log in with...