மலேசிய கையுறை நிறுவனத்தில் 4,000 பேருக்கு கொரோனா தொற்று

மலேசிய அரசாங்கம் டொப் கிளோவ் எனும் கையுறை தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலைகளையும், ஊழியர் தங்கும் விடுதிகளையும் சோதனையிட உத்தரவிட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில நகரான கிள்ளானில் அவ்விடங்கள் அமைந்துள்ளன. அந்தப் பகுதியில் 4,000க்கும் அதிகமானோர் கொவிட்–19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு வசிக்கும் டொப் கிளோவ் நிறுவனத்தின் 6,000 ஊழியர்களில் குறைந்தது பாதிப் பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. கூட்ட நெரிசலான தங்கும் விடுதிகள் அதற்குக் காரணம் என அதிகாரிகள் கூறுவதை நிறுவனம் மறுத்து வருகிறது.

இதுவரை சுமார் 20 தொழிற்சாலைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் 13,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பரிசோதிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய இரப்பர் கையுறை உற்பத்தி நிறுவனமான டொப் கிளோவ் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்த கையுறைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் தற்போது அதன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...