சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்

சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்-Swadeshi Khomba Baby Hoda Purudu Celebrates World Children's Day

Swadeshi Industrial Works PLC உலக சிறுவர் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, இலங்கையின் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கென புதிய சுகாதார விழிப்புணர்வு பிரசாரமொன்றை ஆரம்பித்துள்ளது.

'சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்' (Swadeshi Khomba Baby Hoda Purudu)  எனப் பெயரிடப்பட்டுள்ள நல்ல பழக்கங்களை ஊக்குவிக்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்வில், சபுகஸ்கந்த சோபித்த வித்தியாலயத்தின் (ஆரம்பப் பிரிவு) தரம் 3 ஐச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Swadeshi Industrial Works PLC இன் ஊடகப் பேச்சாளார் இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், 12 நல்ல பழக்கவழக்கங்கள் தொடர்பில் விளக்கமளித்திருந்ததுடன், அதன் பின்னர் யுனிசெப் நிபுணர் (நீர், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்) திரு.நிலுஷா பட்டபெந்தி 12 படிமுறைகளில் கைகளைக் கழுவுதல் தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.  இதன் போது நல்ல பழக்கவழக்கங்களின் முக்கியத்துவத்தும் தொடர்பில் அரங்கேற்றப்பட்ட நாடகத்துடன் கை கழுவுதல் தொடர்பான பாடலொன்றும் பாடசாலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சிறுவர்கள் நன்கு அனுபவித்து மகிழ்ந்தனர். இந் நிகழ்வானது 50 மாணவர்கள் தமது கலைத் திறனை வெளிப்படுத்திய 'நல்ல பழக்கவழக்கங்கள்' சித்திர போட்டியுடன் நிறைவு பெற்றது.

"நல்ல பழக்கவழக்கங்கள் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்பதையும், அவை எப்போதும் குழந்தைகளிடையே வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் அடையாளம் கண்டோம். எனவே, பாடசாலைக்குள்ளேயே  நல்ல பழக்கவழக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வு பலகைகளை பொருத்துவதில் நாங்கள் முக்கிய பங்கு வகித்தோம்.  மாணவர்கள் இதனைப் பார்க்கும் போதெல்லாம் நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதனை இவை நினைவூட்டும். யுனிசெப் அமைப்பின் கைகளைக் கழுவும் வழிகாட்டுதலை உள்ளடக்கிய இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதோடு, இத்தகைய ஆற்றல்மிகு சமூக வலுவூட்டல் திட்டங்களை நடாத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என ‘நல்ல பழக்கவழக்கங்கள்’ விழிப்புணர்வு பிரசாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த Swadeshi Industrial Works PLC இன் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

‘நல்ல பழக்கவழக்கங்கள்’ விழிப்புணர்வு பிரசாரத்தின் ஓர் அங்கமாக, சுவதேசி கொஹம்ப பேபி குழுவானது யுனிசெப் வழிகாட்டுதலின் அடிப்படையில் கை கழுவுவதற்கான சரியான 12 படிமுறைகளைக் காட்சிப்படுத்தும் 12 விழிப்புணர்வு பலகைகளை பாடாசாலையில் பொருத்தியதோடு, கை கழுவும் 12 படிமுறைகளைக் காட்டும் கை கழுவும் தொட்டிகளையும் நன்கொடையாக வழங்கியது.

2019 ஆம் ஆண்டில், Swadeshi நிறுவனம் யுனிசெப் அமைப்பின் BetterParenting.LK உடன் ஒரு புரட்சிகர பங்குடமையில் இணைந்து கொண்டதன் ஊடாக குழந்தை பராமரிப்பு, அபிவிருத்தி, உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த நிபுணர்களின் தகவல்களை வழங்கும் இந்த ஒன்லைன் தளத்துக்கு சுவதேசி ஆதரவளித்தது. சுவதேசி மற்றும் யுனிசெப் அமைப்பின் BetterParenting.LK ஆகிய இரண்டுமே, பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் சிறந்த ஆரம்பத்தை வழங்குவதை உறுதி செய்வதன் மூலம், இளைஞர் தலைமுறையானது அவர்களின் முழு திறனையும் அடைந்து கொள்வதற்கு வலுவூட்டல் என்ற இணைந்த நோக்கத்தைக் கொண்டுள்ளன. Swadeshi Industrial Works PLC தொடர்ச்சியாக உள்நாட்டு சமூகங்களை வலுப்படுத்தி வருகின்றது. இதற்கான முயற்சிகளில் நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஆண்டுதோறும் ஆலோக பூஜைகளுக்கு ஆதரவளித்தல், வேப்பம் மரம் நடுதல், வறண்ட வலயத்தில் வாழும் மக்களுக்கு தண்ணீர் தொட்டிகளை நன்கொடையாக வழங்குதல், பாடசாலை குழந்தைகளுக்கான கல்விக்கான பொருட்கள் மற்றும் பாடசாலைகள், கோயில்கள் மற்றும் ரயில்வேகளுக்கான கை கழுவும் தொட்டி வழங்குதல் போன்றவை சிலவாகும்.

80 ஆண்டுகளாக இலங்கையர்களின் நம்பிக்கைக்குரிய சுவதேசி கொஹம்ப பேபி, இலங்கையின் முதல் தர மூலிகை குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமென்பதுடன், இது கொஹம்ப பேபி சவர்க்காரம் (மூலிகை, புளோரல், மரமஞ்சள் மற்றும் அவகாடோ), கிரீம், கொலோன், எண்ணெய், ஷாம்பு மற்றும் பரிசுப் பொதி ஆகிய தயாரிப்பு வரிசையைக் கொண்டுள்ளது. அனைத்து கொஹம்ப பேபி சவர்க்காரங்களிலும் வேம்பின் அதிசய மூலிகை மூலப்பொருள் உள்ளது. இது குழந்தையின் தோலை இயற்கையாகவே கிருமிகளிலிருந்தும் எரிச்சலிலிருந்தும் பாதுகாக்கிறது. கொஹம்ப பேபி சவர்க்காரம் குழந்தையின் தோலுக்கு இனிமையான வாசனையுடன் அத்தியாவசிய ஊட்டச்சத்தை வழங்கும், உள்ளூர் சந்தையில் சிறந்த மூலிகைகளின் கலவையைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஒரேயொரு தயாரிப்பாகும்.

இலங்கையில் மூலிகை தனிநபர் பராமரிப்பு பிரிவின் முன்னோடியான, Swadeshi Industrial Works PLC, ISO 9001:2015 சான்றளிக்கப்பட்ட நிறுவனமென்பதுடன், 1941 இல் ஒருங்கிணைக்கப்பட்டது. சுவதேசி தயாரிக்கும் அனைத்து பொருட்களும் 100% விலங்கு சேர்மானங்கள் அற்றவை என்பதுடன் ஆரோக்கியமானவை என்று நிரூபிக்கப்பட்டவையாகும்.


Add new comment

Or log in with...