பாதுகாப்பு அமைச்சுடன் தொழில்நுட்ப அமைச்சும் ஜனாதிபதியின் கீழ்

பாதுகாப்பு அமைச்சுடன் தொழில்நுட்ப அமைச்சும் ஜனாதிபதியின் கீழ்-Ministry of Technology Comes Under President’s Purview

கடந்த நவம்பர் 20ஆம் திகதி அமைச்சு விடய தானங்களில் ஏற்படுத்தப்பட்ட திருத்தத்திற்கு ஏற்ப பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவும்; அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள், இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷவும் இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

21ஆம் நூற்றாண்டு அறிவை மையப்படுத்திய நூற்றாண்டாக கருதப்படுகிறது. அதை யதார்த்தமாக்குவதற்கு 'தொழில்நுட்ப அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகம்' இனை உருவாக்குவது 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை திட்டத்தின் நோக்கமாகும்.

விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் ஆகிய அனைத்து துறைகளும் எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தை சார்ந்த பொருளாதாரமாக மாறும். 21ஆம் நூற்றாண்டில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காக கல்வித்துறை முதலீட்டை பொருளாதாரத் துறையுடன் ஒருங்கிணைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவும் வகையில் தொழில்நுட்ப புத்தாக்க கலாச்சாரத்தை (Culture of Technology Innovation) கட்டியெழுப்புவது ஜனாதிபதியின் நோக்கமாகும்.

அரச பொறிமுறையையும் சந்தை செயற்பாடுகளையும் எளிமைப்படுத்துவது, அறிவுப் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் டிஜிற்றல் நிர்வாகத்தை விரிவாக்குவது புதிய அமைச்சின் முன்னுரிமையாகும். சர்வதேச இலத்திரனியல் கட்டண செலுத்தல் முறைகளை நிறுவுதல், நாடு தழுவிய அதிவேக தரவு பரிமாற்ற முறைமை மற்றும் அதனுடன் தொடர்புடைய செல்லிட வலையமைப்பு முறைமையை நிறுவுதல் ஆகியவை புதிய அமைச்சின் விடயத்துறைக்குள் உள்ளடங்கும்.


Add new comment

Or log in with...