உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம் தெரிவித்தது ஏன் ? | தினகரன்

உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம் தெரிவித்தது ஏன் ?

பாராளுமன்றத்தில் லக்‌ஷ்மன் கிரியல்ல விளக்கம்

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய உள்நாட்டு விசாரணைக்கு இணங்கி இருக்காவிட்டால் சர்வதேச விசாரணை இடம்பெற்றிருக்கும் என லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்று நிரைவேற்றப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,...

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. இருப்பினும் தற்போது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் அதே நிலைமை தொடராது என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிகார பகிர்வினை வழங்கினால் நாடு பிளவுபடாது என்றும் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

 


Add new comment

Or log in with...