8ஆவது தடவையாக மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவில்

8ஆவது தடவையாக மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவில்-Maithripala Sirisena Arrives for the 8th Day in Easter Sunday Attack-PCoI

- நேற்று ஆறு மணி நேர வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 8 ஆவது தடவையாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இன்று (25) முற்பகல் அங்கு வருகை தந்த அவர், கடந்த வருடம் ஏப்ரல் 21இல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று (24) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் ஆஜரான அவர், சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக சாட்சியம் அளித்த பின் அங்கிருந்து வெளியேறியதோடு, இன்றையதினமும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...