கைப்பணிப் பொருட்களை வீட்டில் இருந்தவாறே சந்தைப்படுத்தும் திட்டம்

தேசிய உற்பத்தி மற்றும் கைத்தொழில் துறையை விருத்தி செய்வதற்காக பிரம்பு மற்றும் பனைசார் உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறு பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தும் புதிய வேலைத்திட்டமொன்றை பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப்பாண்டங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாடுகள் அமைச்சு மற்றும் பத்திக்,கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்தி அமைச்சு ஆகியவற்றின் ஊடாக அரசு பாரிய செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. சாதாரண விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் இச்செயற்திட்டத்தை அரசு ஆரம்பித்துள்ளது.வாழ்வாதாரத்தில் பின்னடைவை எதிர்கொண்டுள்ளோர் இப்பொருட்களை தயாரித்து சந்தைக்கு விடுவதன் மூலம் பொருளாதாரத்தை விருத்தி செய்து கொள்ள முடியுமென்பதே அரசின் நோக்கமாகும்.

பிரம்பு, பனை, மரப்பண்டங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உள்நாட்டில் மாத்திரமல்லாது வெளிநாட்டில் உள்ளோரும் பெற்றுக் கொள்ளும் வகையில் கைத்தொழில் பேட்டைகளின் மூலம் அவை சந்தைப்படுத்தப்படவுள்ளன.

இதன் முதற்கட்டமாக மேற்படி உபகரணங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்கள்

அனுராதபுரம் 50 கடைப் பகுதியில் அமைந்துள்ள 'விஸ்கம் பியச ''வியாபார நிலையத்தில் நுகர்வோரை கண்கவர்ந்து ஈர்க்கும் வகையில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்படி உற்பத்தி பொருட்களை இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர ,செஹான் சேமசிங்க மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்டோர் அண்மையில் பார்வையிட்டனர்.

 

- மதார் தம்பி ஆரிப்
(அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...