4 பேர் பயணித்த படகு கவிழ்ந்ததில் ஒருவர் மரணம் | தினகரன்

4 பேர் பயணித்த படகு கவிழ்ந்ததில் ஒருவர் மரணம்

4 பேர் பயணித்த படகு கவிழ்ந்ததில் ஒருவர் மரணம்-Boat Capsized-Fisheman Dead

திருகோணமலை, திருக்கடலூர் பகுதியில் இருந்து இன்று (25) காலை 5.45 மணியளவில் சிறிய படகில் 4 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றதில் படகு கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை நிலையையும் மீறி இவ்வாறு கடலுக்குச் சென்றதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர், திருகோணமலை, திருக்கடலூர் ஹரிதாஸ்வத்த பகுதியைச் சேர்ந்த ஈ.ஜே.ஏ. ஜான (45) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

படகு கவிழ்ந்ததில் மூவர் நீந்தி கரை சேர்ந்துள்ள நிலையில் மற்றையவர் நீரில் மூழ்கியதாகவும் அதனையடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மீனவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...