அமெரிக்காவில் டிசம்பரில் தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு | தினகரன்

அமெரிக்காவில் டிசம்பரில் தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு

அமெரிக்காவில் இவ்வாண்டு இறுதிக்குள் குறைந்தது 20 இல் இருந்து 30 மில்லியன் பேருக்காவது கொரோனா தடுப்பூசியைப் போடுவதற்குத் திட்டமிடப்படுகிறது.

மிகப் பெரிய அளவில், தடுப்பூசியைப் போடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளில் குறைந்தது 95 வீதம் பயனளிக்கக்கூடியதை அங்கீகரிப்பது தொடர்பாகக்

கலந்துரையாட அடுத்த மாதம் 10ஆம் திகதி அதிகாரிகள் ஒன்றுகூடவுள்ளனர்.

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி அவசர அனுமதியை பெறுவதற்கு அமெரிக்க நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் 50 மில்லியன் மருந்துகளை தயாரிக்க அது திட்டமிட்டுள்ளது. தடுப்பூசிக்கான அதிகாரபூர்வ அங்கீகாரம் கிடைத்தவுடன் 24 மணிநேரத்துக்குள் மக்கள் அவற்றைப் பெற ஆரம்பிப்பார்கள் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அமெரிக்காவில் நாள் ஒன்றுக்குப் பதிவாகும் வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200,000 ஆக உயர்ந்துள்ளது. ஆண்டு இறுதி விடுமுறைக் காலத்தின்போது அது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.  

உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 12 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 255,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.


Add new comment

Or log in with...