சிரச நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு

இரண்டு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்கும் தாக்கல்

எம்.டி.வி நிறுவனத்திற்கு சொந்தமான சிரச டி.வி நியூஸ் பெஸ்ட் செய்தி அறிக்கையில் ஜோர்ஜ் ஸ்டுவரட் ஹெல்த் தனியார் நிறுவனத்திற்கும், அந்த நிறுவனத்தின் தலைவர் திலித் ஜயவீரவிற்கும் மற்றும் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அபகீர்த்தி ஏற்படும் வகையிலான செய்திகளை வெளியிட வேண்டாம் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று (23) தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்தின் சட்டத்தரணிகள் தமது நிறுவனத்திற்கு எதிராக நியூஸ் பெஸ்ட் செய்தி அறிக்கையில் எம்.டி.வி தனியார் நிறுவனம் அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக தெரிவித்து இரண்டு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஸ் டி சில்வா தலைமையிலான சட்டத்தரணிகள் குழு நேற்று (23) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில், எம்.டி.வி நிறுவனத்திற்கு சொந்தமான நியூஸ் பெஸ்ட் செய்தி அறிக்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

சிரச நியூஸ் பெஸ்ட் தனது பிரதான செய்திகளில் ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் திலித் ஜயவீரவிற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுவதை தடுக்கும் வகையிலான தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திடம் கோரியிருந்தது.

இவ் வழக்கு விசாரணையில் சட்டத்தரணி சனத் நிசாந்த விஜேவர்தனவின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமெஸ் த சில்வா, சட்டத்தரணி ருவந்த குரே, சட்டத்தரணி எஸ் வசந்தகுமார் நீல்ஸ் ஆகியோர் ஜோர்ஜ் ஸ்டுவர்ட் நிறுவனத்தின் சார்பில் ஆஜரானார்கள்.


Add new comment

Or log in with...