கொழும்பிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு செல்வது நிலைமையை மேலும் சிக்கலாக்கும்

சுகாதாரத் துறை துணை பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த எச்சரிக்கை

ஒரு புதிய துணைக்கொரோனா கொத்து உருவாகாமல் தடுப்பதற்கான சிறந்த வழி வீட்டிலேயே இருந்து தேவையற்ற பயணத்தைத் தவிர்ப்பது மட்டுமேயாகும். கொழும்பிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்வது ஒரு புதிய கொத்து உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். அது நிலை மையை சிக்கலாக்கும் என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலில் அடுத்த சில நாட்களில் முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதாரதுறை துணை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதுள்ள கொரோனா கொத்துக்கள் தொடர்பான நிலைமை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா பரவலுக்கான தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களைக் கொண்டுள்ளது. எனவே மூன்று தனிமைப்படுத்தல் காலங்களுக்குப் பிறகு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

பொலிஸ் மற்றும் சிறைச்சாலை போன்ற மூடிய கொத்துக்களை கட்டுப்படுத்தலாம். திறந்த கொத்துக்களுடன் ஒப்பிடும்போது இந்த மூடிய கொத்துகளை கட்டுப்படுத்த முடியும்.

மினுவாங்கொட கொரோனா கொத்து மூன்று தனிமைப்படுத்தல் காலத்திற்குப் பின்னரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதேவேளை புதிய துணைக் கொரோனா கொத்துகள் எதுவும் எதிர்பாராத விதமாக இதுவரை வெளிவரவில்லை.

பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்வதன் மூலம் துணைக்கொத்துக்கள் தோன்றுவதைத் தடுக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது.

லோரன்ஸ் செல்வநாயகம் 

 


Add new comment

Or log in with...