ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய ஆண்டான்–அடிமை உடல்கள் மீட்பு | தினகரன்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய ஆண்டான்–அடிமை உடல்கள் மீட்பு

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலை வெடிப்பினால் அழிந்த ரோமானிய நகரான பொம்பேய்யில் உயிரிழந்த இருவரின் உடல் எச்சங்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் ஒருவர் பெரும்பாலும் உயர் அந்தஸ்து படைத்தவர் என்றும் மற்றவர் அடிமையாக இருக்கலாம் என்றும் பொக்பேய் அகழ்வாராய்ச்சி பூங்கா

அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் எரிமலை வெடித்தபோது உயிர் தப்ப முயன்று அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அந்தப் பூங்காவின் பணிப்பாளர் மசிமோ ஒசானா தொரிவித்துள்ளார்.

வசுவியஸ் மலையில் கி.பி. 79 இல் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் பொம்பேய் நகர் முற்றாக அழிந்தது. இதன்போது அந்த நகர் சாம்பலால் புதையுண்டு, அந்தக் காலத்தை அப்படியே காண்பிக்கும் வகையில் இன்றும் அந்த அழிவுகள் உள்ளன.

இத்தால் இருக்கும் அந்த பண்டைய நகரின் புறநகர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியிலேயே இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் உள்ள செல்வந்த ஆண் 30 தொடக்கம் 40 வயது கொண்டவர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அவரின் கழுத்துப் பகுதியில் கம்பளி அங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மற்ற ஆடவர் 18 தொடக்கம் 23 வயதுடையவராவார். அவரது நொறுக்கப்பட்ட முதுகெலும்புகள் அவர் அடிமை என்பதை காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...