மொடர்னா தடுப்பு மருந்துக்கு 25 தொடக்கம் 37 டொலர் விலை

மொடர்னா மருந்தாக்க நிறுவனம் அதன் கொவிட்–19 தடுப்புமருந்தை 25 டொலருக்கும் 37 டொலருக்கும் இடைப்பட்ட விலையில் அரசாங்கங்களுக்கு விற்கவுள்ளதாய்த் தெரிவித்துள்ளது.

அது கிட்டத்தட்ட சளிகாய்ச்சலுக்கான தடுப்புமருந்தின் விலைக்கு நிகரானது என்பதை மொடர்னாவின் தலைமை நிர்வாக அதிகாரி சுட்டிக்காட்டினார்.

நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்திவரும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் 25 டொலருக்கும் குறைவான விலையில் தடுப்புமருந்தைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஒன்றியம் விரும்புவதாய்த் தெரிவித்தனர். மொடர்னா நிறுவனம் கொரோனா தொற்றுக்கு எதிரான அதன் புதிய சோதனைநிலைத் தடுப்புமருந்து சுமார் 95 வீதம் வெற்றிகரமாய்ச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளது.

மனிதர்களிடம் நடத்தப்பட்டு வரும் இறுதிநிலைச் சோதனையில் இருந்து கிடைக்கப்பெற்ற இடைக்காலத் தகவல்களின் அடிப்படையில் அதனைத் தெரிவித்தது.

தவிர பயோன்டெக் மற்றும் பைசர் நிறுவனம் இணைந்து மேம்படுத்தி வரும் மற்றொரு தடுப்பு மருந்தும் சாதனமான முடிவை வெளியிட்டு வருகிறது.


Add new comment

Or log in with...