அமெரிக்காவில் ஒரு வாரத்தில் ஒரு மில். கொரோனா தொற்று

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியுள்ளது. அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 250,000க்கும் அதிகமாக உள்ளது.

உலகிலேயே வைரஸ் பரவலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கடந்த 6 நாள்களில் ஒரு மில்லியன் பேருக்குப் புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

பொதுச் சுகாதார வழிமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்றத் தவறினால் மிதமிஞ்சிய அளவில் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க நாட்டின் சுகாதாரத்துறை திணறக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வரும் வியாழக்கிழமை அனுசரிக்கப்படும் ‘தாங்ஸ் கிவின்’ பொது விடுமுறையின்போது, பயணம் மேற்கொள்வதையும், மற்ற குடும்பங்களோடு ஒன்றுகூடுவதையும் தவிர்க்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும், அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனும், தேசிய அளவிலான முடக்கநிலையை அறிவிக்க விரும்பவில்லை.

மாநிலங்கள், சொந்தக் கட்டுப்பாடுகளை விதிப்பதை அவர்கள் ஆதரிக்கின்றனர்.

இம்மாதத்தில் மட்டும் 20க்கும் அதிகமான மாநிலங்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிவது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

கலிபோர்னியாவில் கடந்த சனிக்கிழமை இரவுநேர ஊரடங்கு அமுலுக்கு வந்தது. அது அடுத்த மாதம் 21ஆம் திகதிவரை அமுலில் இருக்கும்.


Add new comment

Or log in with...