கன்னட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான அஞ்சலி | தினகரன்

கன்னட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான அஞ்சலி

கன்னட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான அஞ்சலி-Cinema-Anjali Actress Pair for Kannada Superstar

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சலி, கன்னட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

'கோலி சோடா' மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு கன்னட திரையுலகில் நுழைகிறார். கன்னடத்தில் வெற்றி இணையான சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயாவை இயக்குகிறார்.

‘கடுகு’ ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் சிவராஜ் குமார் ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா இன்னொரு வேடத்தில் நடிக்கிறார். மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தைத் தமிழில் 'கோலிசோடா', 'கடுகு' போன்ற படங்களைத் தயாரித்த ரஃப்நோட் நிறுவனம், கன்னடத்தில் கிருஷ்ண சர்த்தக்-ன் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி.விஜய்மில்டன். ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார். பிரகாஷா புட்டசாமி கலை இயக்குநராக பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சண்டை பயிற்சி செய்கிறார்.

இப்படத்தின் பூஜை பெங்களூரில் நடந்தது. வரும் 23ஆம் திகதி முதல் தொடர்ந்து 40 நாட்கள் பெங்களூரில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.


Add new comment

Or log in with...