கல்வி, சமூக பணியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிபர் மர்ஹூம் பாரூக் | தினகரன்

கல்வி, சமூக பணியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிபர் மர்ஹூம் பாரூக்

ஆசிரியராக, பிரதிஅதிபராக,அதிபராக சமூகசேவையாளனாக திகழ்ந்த எம்.ஐ.எம் பாரூக் 2018 செப்டம்பர் 30 ஆம் திகதி காலமானார். பேருவளை மருதானை கிராமத்தில் மர்ஹூம்களான முஹம்மத் இப்ராஹீம் மரிக்கார்,யஹ்யாநாச்சியார் தம்பதியினருக்கு புதல்வராக1942 .02.10 ஆம் திகதி மர்ஹூம் பாரூக் பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை மாலிகாஹேனை முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பயின்றார். ஆத்மீகக் கல்வியை மருதானைஅப்ரார் பள்ளிவாசல் குர்ஆன் மத்ரஸாவில் பெற்றார். பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த பின்னர் 1961 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் பேருவளை ஹலவகொட பாடசாலையில் தனது ஆசிரியர் சேவையைஆரம்பித்தார். 1962 ஆம் ஆண்டு பலாலி,காலி மற்றும் கண்டி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தனது பயிற்சியை ஆரம்பித்தார்.

பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஒலிவில் பகுதியில் உள்ள பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து கொழும்பு மட்டக்ககுளிய முஸ்லிம் வித்தியாலயம்,கொழும்பு அல் இக்பால் மகாவித்தியாலயம்,கொழும்பு மகாவத்த தமிழ் வித்தியாலயம்,கொழும்பு மிகுந்து மாவத்த முஸ்லிம் வித்தியாலயம், அல் ஹிதாயா முஸ்லிம் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் தனது ஆசிரியர் சேவைப் பணியை செவ்வனே தொடர்ந்தார்.

மர்ஹூம் பாரூக் மாஸ்டர் 1974 ஆம் ஆண்டு பேருவளை மாளிகாஹேனை முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றினார். 1974 ஆம் பாணந்துறை ஹேனமுல்லை ஜீலான் மத்திய கல்லூரியில் அதிபராக பணியை ஆரம்பித்தார். தொடர்ந்து 1976 ஆம் ஆண்டு மக்கொனை அல் ஹஸனிய்யா மகாவித்தியாலயத்தில் அதிபராக பதவியேற்றார். 1976 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை சுமார் 14 வருட காலம் அதிபர் பதவி வகித்து அதே பாடசாலையில் சிறப்பான சேவையாற்றி ஓய்வு பெற்றார்.

மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட மக்கொனை அல் ஹஸனீய்யா முஸ்லிம் மஹாவித்தியாலயத்தை கட்டியெழுப்ப இவர் பாடுபட்டார். இவரது விடாமுயற்சியின் காரணமாக 1980 ஆம் ஆண்டு பாடசாலைக்கு மின்சார வசதி பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன், விளையாட்டு மைதானம்,மினிவிஞ்ஞான ஆய்வுகூடம், பாடசாலை சுற்றுமதில்,பாக்கீர் மாக்கார் ஞாபகார்த்த கட்டடம் ஆகியவை பெற்றுக் கொடுக்கப்பட்டன.

பிரதேச பெற்றோர் மத்தியில் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பிரதேச தனவந்தர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் முழுமையான பங்களிப்பை பெற்று இப்பாடசாலையை பல துறைகளிலும் கட்டியெழுப்பினார்.

இலங்கையின் முதலாவதுபள்ளிவாசலான மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் முன்னேற்றத்திலும் இலங்கையின் முதலாவது முஸ்லிம் மகளிர் கல்லூரியானமருதானை அல் பாஸியதுன் நஸ்ரியாமகளிர் கல்லூரியினதும் முன்னேற்றத்தில் இவர் காட்டிய கரிசனை என்றும் மறக்க முடியாதது. களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாழிபமுன்னணிகள் சம்மேளனத்தின் தலைவராக,செயலாளராகபதவி வகித்துஅரும் சேவைகளை புரிந்தார். கல்வி சமூக சேவைக்கென தன்னையேஅர்பணித்தவர் மர்ஹூம் பாரூக் மாஸ்டர்.

 

- பீ.எம் முக்தார்
பேருவளை விஷேட நிருபர்


Add new comment

Or log in with...