அக்கரைப்பற்றில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைப்பு

அரசின் 100000 ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீனோடைக்கட்டு - அக்கரைப்பற்று வீதியினை அபிவிருத்தி செய்யும் பூர்வாங்க வேலைத்திட்டம் நேற்று காலை (22) ஞாயிற்றுக்கு கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்வின் வேண்டுகோளிற்கிணங்க, கிராமிய வீதி மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் நிதிஒதுக்கீட்டின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையுடன் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த வீதியானது 05 கிலோ மீற்றர் தூரம் வரைக்கும் காபட் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கரைப்பற்று மேலதிக மாகாண பணிப்பாளர் ஐ.எல். அமீனுல் பாரி மற்றும் பிரதம பொறியியலாளர் எம்.பி. அலியார் ஆகியோர்களின் வழிகாட்டலின் கீழ் குறித்த வீதியின் பூர்வாங்க வேலைகளானது அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஷக்கியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கரைப்பற்று நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.எல்.எம். இஸ்மாயில், பொறியியலாளர் ஏ.எல்.எம். சபீக், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான ஏ.ஏச்.எம். நாளீர், கே. ரவிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை இந்த வீதி அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்ததாக மரக்கன்றுகளும் அதிதிகளால் நடப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

(நிந்தவூர் குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...