அமைச்சர் விமல் வீரவங்ச
2021 ஜனவரி மாதம் முதல் ஐரோப்பிய நாடுகளின் மட்டத்திலான அனைத்து வகை உயர்தர டயர்களும் உள்நாட்டு கைத்தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
தென்கிழக்காசியாவில் பாரிய டயர் தொழிற்சாலையான ரிஜ்வே டயர் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
முதற்கட்டமாக 100 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தொழில்சாலை இரண்டாம் கட்டமாக 150 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது.
இந்த உற்பத்திகளில் 80 வீதமானவை ஏற்றுமதி செய்யப்படவுள்ளதோடு தொழிற்சாலையை சுற்றிவாழும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டத்தின் பின்னர் டயர் உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நிய செலாவாணியை ஈட்டவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, அமைச்சின் செயலாளர்,தொழிற்சாலை உயரதிகாரிகள் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.
Add new comment