சிவாஜியை கடித்த பாம்பு இறந்தது | தினகரன்

சிவாஜியை கடித்த பாம்பு இறந்தது

ஆபத்தான கட்டத்தை தாண்டினார்

பாம்பு கடிக்கு இலக்கான வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஆபத்தான கட்டத்தைக் கடந்து சாதாரண நிலைக்கு வந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று முன்தினம் இரவு வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து வீடு செல்வதற்காக அலுவலகத்தின் கதவை அவர் மூடியபோது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியது.

ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த சிவாஜிலிங்கம் தற்போது சாதாரண நிலைக்கு வந்துள்ளார்.

இதேவேளை, அவருக்குக் கடித்த பாம்பைப் போத்தல் ஒன்றில் அடைத்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அது உயிரிழந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

 


Add new comment

Or log in with...