மெக்சிகோவில் 100,000ஐ தாண்டிய உயிரிழப்புக்கள்

கொரோனா தொற்றினால் உயிரிழப்பு எண்ணிக்கை 100,000ஐ தாண்டிய உலகின் நான்காவது நாடாக மெக்சிகோ பதிவாகியுள்ளது.

இந்த நோய்த் தொற்று ஆரம்பம் தொடக்கம் அந்நாட்டில் இதுவரை மொத்தம் 100,104 பேர் உயிரிழந்திருப்பதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளி விபரம் காட்டுகிறது.

உலகில் மிகப்பெரிய ஸ்மானிய மொழி பேசும் நாடாக இருக்கும் மெக்சிகோவில் நோய்த் தொற்று சம்பவங்கள் ஒரு மில்லியனைக் கடந்து ஒருசில நாட்களிலேயே இந்த புதிய மோசமான மைல்கல் எட்டப்பட்டுள்ளது. எனினும் இந்த நோய்த் தொற்றின் பாதிப்பு கூறப்படுவதை விடவும் அதிகமாக இருப்பதாக அரச அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். 125 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மெக்சிகோவில் உலகில் மிக அதிகமாக, உயிரிழப்பு வீதம் 9.8 ஆக இருப்பதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் தரவுகள் காட்டுகின்றன.


Add new comment

Or log in with...