கொவிட் –19: ஐரோப்பாவில் 17 விநாடிக்கு ஒருவர் பலி

ஐரோப்பாவில் 17 விநாடிக்கு ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பலியாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் 15.7 மில்லியனுக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் மட்டும் 29,000க்கும் அதிகமானோர் பலியாகினர். பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில், பாதிக்கப்பட்டோரில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பாவில் கடந்த ஓக்டோபர் மாதம் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு தீவிரம் அடைந்ததை அடுத்து அங்கு பல நாடுகளிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் இதுவரை மொத்தம் 15,738,179 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 354,154 உயிரிழப்புகள் நிகழ்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அடுத்த ஆறு மாதம், ஐரோப்பிய நாடுகளுக்குக் கடுமையாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

தடுப்பூசி குறித்து நம்பிக்கையான தகவல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. என்றாலும், அது மட்டுமே தீர்வாகாது என்று அந்த அமைப்பு குறிப்பிட்டது.


Add new comment

Or log in with...