மேன்முறையீட்டு நீதிபதிகள், பொலிஸ் மாஅதிபர் நியமனம் திங்கட்கிழமை முடிவு | தினகரன்

மேன்முறையீட்டு நீதிபதிகள், பொலிஸ் மாஅதிபர் நியமனம் திங்கட்கிழமை முடிவு

மேன்முறையீட்டு நீதிபதிகள், பொலிஸ் மாஅதிபர் நியமனம் திங்கட்கிழமை முடிவு-Vacancies of CoA and Appointments of IGP-On Nov 23 Parliamentary Council

- பாராளுமன்ற பேரவை நவம்பர் 23 இல் கூடி முடிவெடுக்கும்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் வெற்றிடங்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நியமனம் தொடர்பில், எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி திங்கட்கிழமை முடிவெடுக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற பேரவை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடவுள்ளது. இதன்போது இவ்விடயங்கள் தொடர்பில் பரிசீலிக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் ஆகியோர் பாராளுமன்ற பேரவையில் அங்கம் வகிக்கின்றனர். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அதன் செயலாளராக பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...