ராமாஞ்ஞ மகா நிக்காய தேரருக்கு முஸ்லிம் அமைப்புகள் இறுதி மரியாதை | தினகரன்

ராமாஞ்ஞ மகா நிக்காய தேரருக்கு முஸ்லிம் அமைப்புகள் இறுதி மரியாதை

ராமாஞ்ஞ மகா நிக்காய தேரருக்கு முஸ்லிம் அமைப்புகள் இறுதி மரியாதை-Mulsim Organization Final Respect-Cheif Prelate of Ramanna Maha Nikaya

ராமாஞ்ஞ மகா நிக்காயவின் அக்ரமஹா பண்டித சங்கைக்குரிய நாபான பேமசிறி நாயக்க தேரரின் பூதவுடலுக்கு  கண்டியிலுள்ள முஸ்லிம்  அமைப்புகள்   மரியாதை செலுத்தியுள்ளனர்.

இவருடைய பூதவுடல் இறுதி அஞ்சசலிக்காக மெனிக்ஹின்ன பிரதேசத்தில் ராம்மாஞ்ஞ மஹா நிக்காய இடத்தில்  வைக்கப்பட்டுள்ளது.

ராமாஞ்ஞ மகா நிக்காய தேரருக்கு முஸ்லிம் அமைப்புகள் இறுதி மரியாதை-Mulsim Organization Final Respect-Cheif Prelate of Ramanna Maha Nikaya

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் கண்டி மாவட்ட கிளை, கண்டி பள்ளிவாயல்கள் சம்மேளனம்  மற்றும் கண்டி முஸ்லிம் வர்த்த சங்கம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளே  இவ்வாறு நேற்று ( 20) இரவு  அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்திருந்தனர்.

வணக்கத்திற்குரிய நாபான பேமசிறி தேரரின் இரங்கல் செய்தியொன்று அடங்கிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபையின் சட்டகமொன்றும்  அமைப்புகளினால்  வழங்கப்பட்டிருந்தன. மேலும் அமைப்புகளினது,  முக்கியஸ்தர்களாக மௌலவி  எச். உமர்தீன் (KDJU), மௌலவி  பஸ்ருல் ரஹ்மான் ( KDJU), கே.ஆர்.ஏ. சித்தீக், எம் .சலீம்டீன் ( KMTA) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாபான பேமசிறி தேரரின் இறுதி கிரியைகள் நாளையதினம் (22) ஞாயிற்றுக்கிழமை, கண்டி, குண்டசாலை, பண்டாரநாயக்க தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(எம்.ஏ. அமீனுல்லா)


Add new comment

Or log in with...