‘மனிதகுலத்திற்கான தொழில்நுட்பம்-உலகத்திற்கான கருணை’ OPPO INNO DAY 2020

‘மனிதகுலத்திற்கான தொழில்நுட்பம்-உலகத்திற்கான கருணை’ OPPO INNO DAY 2020-Technology for Mankind-Kindness for the World-OPPO INNO DAY 2020

3 + N + X மூலோபாயத்தை வெளியிட்டது OPPO

17 நவம்பர், 2020, ஷென்ஷென், சீனா: OPPO INNO DAY 2020 “எதிர்காலத்தை நோக்கி முன் செல்லல்” எனும் கருப்பொருளில் நவம்பர் 17 ஆம் திகதி ஷென்செனில் நடைபெற்றது. அனுபவத்தின் இணையத்தின் பின்னணியில், OPPO “மனிதகுலத்திற்கான தொழில்நுட்பம், உலகத்திற்கான கருணை” மற்றும் “சிறந்த கண்டுபிடிப்பு” ஆகியவற்றை முன்வைத்து, முதன் முறையாக “3 + N + X” தொழில்நுட்ப மேம்பாட்டு மூலோபாயத்தை வெளியிட்டது. இந்நிகழ்வில், OPPO OPPO X 2021 உருளக்கூடிய கையடக்கத் தொலைபேசி எண்ணக்கரு,  OPPO AR Glass 2021, OPPO CybeReal AR மென்பொருள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.

‘மனிதகுலத்திற்கான தொழில்நுட்பம்-உலகத்திற்கான கருணை’ OPPO INNO DAY 2020-Technology for Mankind-Kindness for the World-OPPO INNO DAY 2020

OPPO நிறுவனர் மற்றும் பிரதான் நிறைவேற்று அதிகாரி டொனி சென் இதன்போது தெரிவிக்கையில், OPPO அதன் 3 + N + X தொழில்நுட்ப அபிவிருத்தி மூலோபாயத்தின் மூலம் சிறந்த கண்டுபிடிப்புகளைத் தொடரவும், சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவதிலும் உறுதியாக உள்ளதாக சுட்டிக்காட்டினார். கூட்டுநிறுவன கண்டுபிடிப்புகளின் நோக்கம் மக்களாக இருக்க வேண்டும் என்று OPPO நம்புகிறது, என்றும் அவர் கூறினார்.

‘மனிதகுலத்திற்கான தொழில்நுட்பம்-உலகத்திற்கான கருணை’ OPPO INNO DAY 2020-Technology for Mankind-Kindness for the World-OPPO INNO DAY 2020

"3" என்பது மூன்று அடிப்படை தொழில்நுட்பங்களை குறிக்கிறது, அதாவது வன்பொருள், மென்பொருள், சேவை தொழில்நுட்பங்கள். இது உலகளாவிய பயனர்களுக்கு ஒருங்கிணைந்த ஸ்மார்ட் வாழ்க்கையை, "N" கொண்டு வர OPPO க்கு உதவுகிறது. இது AI, பாதுகாப்பு, மல்டிமீடியா, தனிப்படட தரவு உரிமை, ஒன்றோடொன்று தொடர்பு உள்ளிட்ட பல OPPO இன் அத்தியாவசிய திறன்களைக் குறிக்கிறது. இறுதியாக, "X", முன்னணியில் திகழுதல் மற்றும் மாறுபட்ட தொழில்நுட்பங்கள், flash charge தொழில்நுட்பம் போன்ற மூலோபாய வளங்களை குறிக்கிறது. இது புதுமைகளை வளர்ப்பதோடு, பயனர் அனுபவத்தை மேலும் மேம்படுத்துகிறது.

‘மனிதகுலத்திற்கான தொழில்நுட்பம்-உலகத்திற்கான கருணை’ OPPO INNO DAY 2020-Technology for Mankind-Kindness for the World-OPPO INNO DAY 2020“தொழில்நுட்ப திறன்களை உருவாக்குவது முக்கியமான விடயமாக இருந்தபோதிலும், அவற்றை புதுமையாக ஒருங்கிணைப்பது அதை விட முக்கியமானதாகும். பயனர்களுக்கு நன்மைகளை கொண்டு வர வேண்டும் என OPPO ஆகிய நாம் நம்புவதோடு, அனைத்து சிக்கல்களையும் எங்களிடம் விட்டுவிடுங்கள்” என்று OPPO பிரதித் தலைவரும் OPPO ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான லெவின் லியு தனது உரையில் தெரிவித்தார்..

அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று எண்ணக்கரு தயாரிப்புகளில் ஒன்றான OPPO X 2021 உருளக்கூடிய எண்ணக்கருக் கொண்ட கையடக்கத் தொலைபேசி, நெகிழ்வான காட்சி மற்றும் கட்டமைப்பு குவியலிடுதலில், OPPO இன் R&D இன் சமீபத்திய சாதனையாகும். இது பயனர்களுக்கு அதிக இயல்பான ஊடாடும் அனுபவத்தை தருகிறது. தொடர்ச்சியாக மாறுபடும் OLED திரை சிறிய அளவில் 6.7 அங்குலமாகவும் பெரிய அளவில் 7.4 அங்குலங்கள் வரை அமையும். இதன் மூலம் பயனர்கள் தங்களின் உண்மையான தேவைப்பாட்டின் அடிப்படையில் காட்சியின் அளவை சரி செய்ய உதவுகிறது.

‘மனிதகுலத்திற்கான தொழில்நுட்பம்-உலகத்திற்கான கருணை’ OPPO INNO DAY 2020-Technology for Mankind-Kindness for the World-OPPO INNO DAY 2020

புத்தம் புதிய பிளவு கொண்ட வடிவமைப்பைக்கு ஒத்திசையும், OPPO AR Glass 2021 மூக்குக்கண்ணாடி ஆனது, மிகக் கச்சிதமான, பாரமற்ற, stereo fisheye கெமரா, ஒரு ToF சென்சர், RGB கெமரா உள்ளிட்ட பல்வேறு சென்சர்களைக் கொண்டுள்ளது. பல இயற்கை தொடர்புகளுக்கு அவை ஒத்திசைவதோடு மாத்திரமன்றி, ஸ்மார்ட்போன் வழியான தொடர்புகள், சைகை அடிப்படையிலான இடைவினைகள் மற்றும் இடஞ்சார்ந்த உள்ளூர்மயமாக்கல் உள்ளிட்ட விடயங்களையும் உட்கொண்டுள்ளது.

‘மனிதகுலத்திற்கான தொழில்நுட்பம்-உலகத்திற்கான கருணை’ OPPO INNO DAY 2020-Technology for Mankind-Kindness for the World-OPPO INNO DAY 2020

நிகழ்நேர, இடஞ்சார்ந்த கணக்கீட்டு தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் CybeReal AR மென்பொருளானது, உயர் துல்லியமான உள்ளூர்மய விடயங்கள் மற்றும் காட்சியை அறிதலை செயல்படுத்துவதோடு, OPPO இன் குறித்த 3 முக்கிய தொழில்நுட்பங்களுக்கு ஒத்திசைகிறது. உண்மையான உலகத்தைப் பற்றிய பயனரின் உணர்வையும் புரிதலையும் வளப்படுத்தும் வகையில், உலகத்தையே சென்டிமீட்டர்களுக்குள் துல்லியமாக மாற்றியமைத்தல், நிகழ்நேர உயர்-துல்லிய உள்ளூர்மயமாக்கல், OPPO Cloud, உள்ளிட்ட விடயங்களை கொண்டுள்ளது.

OPPO Sri Lanka பற்றி
முன்னணி ஸ்மார்ட்போன் நாமமான OPPO, அதன் முதலாவது ஸ்மார்ட் போனான “Smiley Face” (“ஸ்மைலி பேஸ்”) ஐ 2018 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது. இன்று, OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு Find மற்றும் R தொடர்களின் கீழான பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது, ColorOS இயங்குதளம், அதே போன்று OPPO Cloud மற்றும் OPPO + போன்ற இணைய சேவைகள். OPPO, 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் இயங்குகிறது. உலகளாவிய ரீதியில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 4 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அத்துடன் லண்டனில் ஒரு சர்வதேச வடிவமைப்பு மையத்தையும் கொண்டுள்ளது. OPPO இன் 40,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்வியலை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர். 

2015 இல், இலங்கையில் செல்பி மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் நுண்ணறிவு மென்பொருள்களுக்காக, OPPO அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதோடு, அதன் முதன்மை ‘F’ தொடர் மற்றும் பிரபலமான Reno தொடர் மூலம் பல மொடல்கள் மூலம், பரந்துபட்ட நுகர்வோர் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது. OPPO Sri Lanka ஆனது, அபான்ஸ், சிங்ககிரி, டயலொக், டாராஸ் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட OPPO விற்பனையாளர்களுடன் வலுவான கூட்டிணைப்பைக் கொண்டுள்ளதுடன், அவை நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களைச் சென்றடைய OPPO விற்கு உதவுகின்றன.


Add new comment

Or log in with...