2021 வரவு செலவுத் திட்ட உரை (முழு உரை) | தினகரன்

2021 வரவு செலவுத் திட்ட உரை (முழு உரை)

2021 வரவு செலவுத் திட்ட உரை பகுதி - i

2021 வரவு செலவுத் திட்ட உரை பகுதி - ii

  • 2021 ஆம் ஆண்டுக்காக மதிப்பீடு செய்யப்பட்ட அரசாங்கத்தின் வருமானம் - ரூ. 1,886 பில்லியன்
  • அரசாங்கத்தின் மொத்த செலவு - ரூ. 3,441 பில்லியன்
  • வருமானம் - செலவின இடைவெளி - ரூ. 1,555 பில்லியன்

- 2025 அளவில் வரவு செலவுப் பற்றாக்குறையை 4% இற்கு இலக்கைக் கொண்ட பொருளாதார வளர்ச்சியினூடாக விரிவுபடுத்தும் வரி வருமான வளர்ச்சி

- அரசாங்க வருமான வளர்ச்சியை 9.7% இலிருந்து 14.1% ஆக அதிகரிப்பது, வரவு - செலவுத் திட்டத்தின் இடைவெளியைக் குறைக்கும்

- 2021 இல் எதிர்பார்க்கப்படும் பொளாதார வளர்ச்சி 5.5% உள்ள அதே வேளையில் அதனை 6% இற்கு இட்டுச் செல்லுதல்

- 2021 இல் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம்...

- பிரதேச சபைகளின் குப்பைகளை மீள்சுழற்சி செய்ய ரூ. 3,000 மில்லியன் ஒதுக்கீடு...

- பிரதேச சபைகளால் வீதி பராமரிப்பு உள்ளிட்ட வசதிகளை வழங்க ரூ. 3,,000 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை...

- யானை வேலி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ. 3,000 மில்லியன் ஒதுக்கீடு...

- களிமண் மற்றும் பித்தளை, மரம் செதுக்கல் உற்பத்தி கிராமங்களுக்கு ரூ. 2,500 மில்லியன் ஒதுக்கீடு...

- கிராமப்புற வைத்தியசாலைகளின் வளர்ச்சிக்கு ரூ. 5,000 மில்லியன் ஒதுக்க நடவடிக்கை...

பிரதமரினால் 2021 வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பம்-PM Mahinda Rajapaksa Begins Presenting Budget 2021 to the Parliament

- கிராமப்புற மருத்துவமனைகளின் வளர்ச்சிக்கு ரூ. 5,000 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை...

- கிராமப்புற மக்களின் வேண்டுகோளுக்கு அமைய, குறித்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும்...

- 'கிராமத்துடனான உரையாடல்' அரசாங்க  திட்டத்தில் கிராமப்புற மக்கள் கோரிய அபிவிருத்தி நலக் கோரிக்கையை நிறைவேற்றுவதில் விசேட கவனம்...

- நகர மற்றும் கிராமப்புறங்களில் 'சதொச' பல்பொருள் அங்காடிகளை விரிவுபடுத்த நடவடிக்கை...

- சமுர்த்தி பெறும் பெண்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட 25,000 பெண்களுக்கு கிராமப்புற கடைகளை அமைக்க அனுமதி...

- 65 வயதின் இறுதி வரை வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம்...

- ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஓய்வூதிய வயதெல்லையை 60 வயதாக நீடிக்க நடவடிக்கை...

- ஆண், பெண்களுக்கென கட்டாய ஓய்வு வயதெல்லை வேறுபாட்டை நியாயப்படுத்த முடியாது...

- அழிக்கப்பட்ட காடுகளை இராணுவத்தின் உதவியுடன் மீள் நடுகை செய்வதற்கு நடவடிக்கை...

- மணல் அகழ்வை ஒழுங்குபடுத்த ரூ. 200 மில்லியன் ஒதுக்கீடு...

- 2021 ஜனவரி 01 முதல் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக், பொலித்தீனுக்கு தடை...

- இதன் மூலம் அரச ஊழியர்கள் மாதமொன்றுக்கு ரூ. 3,000 - 4,00 வரை சேமிக்க முடியும்...

- அரச ஊழியர்களின் வீடமைப்பு மற்றம் ஆதனக் கடன்களுக்கான வட்டியை உச்சபட்சம் 7% ஆக குறைக்க முன்மொழிவு...

- வெளிநாட்டு தொழில் வாய்ப்பினை நாடுபவர்களுக்கு இரண்டு வருட கொடுப்பனவுடன் விடுமுறை...

- நிறைவேற்று தரமல்லாத அரச ஊழியர்கள் அலுவலக நேரத்திற்குப் பின்னர் ஏனைய தொழில்களில் ஈடுபட அனுமதி...

- அரசு ஊழியர்களுக்கு சூரிய மின்சக்தி வசதிகளை வழங்குவதற்கு கடன் திட்டம்...

- மூடிய பொது சேவைக்கு ஏற்ப அரச ஊழியர்களை அவர்களின் சொந்த ஊர்களில் இணைப்பதன் மூலம் ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்க நடவடிக்கை...

- தனிப்பட்ட வர்த்தக முகாமைத்துவத்தில் விசேட கவனம்...

- 20ஆவது திருத்தத்தின் மூலம் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்பதால், பல ஆண்டுகளாக மேல் நீதிமன்றத்தில் குவிந்துள்ள ராளமான வழக்குகளை விரைவுபடுத்த முடிந்தமை தொடர்பில் பிரதமர் நன்றி தெரிவிப்பு...

- நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரூ. 20,000 மில்லியன் ஒதுக்கீடு...

- ETI வைப்பாளர்களின் துன்பத்திற்கு காரணமான நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க விசேட கவனம்...

- வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை மேற்பார்வையிடும் நிறுவனமான மத்திய வங்கியை மறுசீரமைக்க நடவடிக்கை...

- குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு 6.5% கடன் திட்டம்...

- கட்டுமானத் துறையில் கழிவுகளை மீள்சுழற்சி செய்றும் முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகை வழங்குவதற்கு நடவடிக்கை...

- அரச கட்டுமான கைத்தொழிலாளர்களுக்கு நிதி நிவாரணம்

- கல், மணல், மண் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள், சுரங்க மையங்கள் ஆகியவற்றை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை...

- கட்டுமானத் தொழிலுக்கான நிறுவன ரீதியான அனுமதிப்பத்திரத்தை எளிமைப்படுத்தப்படும்...

- வாகனத் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்குவிப்பதற்காக உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரிகளை குறைக்க நடவடிக்கை...

- அரசாங்க கட்டுமானங்களை அரச கட்டுமானத் துறை நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு கவனம்...

- மூலதன செலவுகளை குறைக்க பல பரிந்துரைகள்...

- இருதரப்பு ஒப்பந்தங்களை மீளாய்வு செய்து, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதில் கவனம்...

- வெளிநாட்டு பொருளாதார உறவுகள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பை மறுசீரமைக்க நடவடிக்கை...

- உள்நாட்டு படகு மற்றும் கப்பல் கட்டுமானத்திற்கு 7 வருட வரிவிலக்கு

- உரிய கனிம தொழில்களை உருவாக்க ரூ. 2,000 மில்லியனை ஒதுக்க முன்மொழிவு...

- காரியம் போன்ற மறைந்துள்ள கைத்தொழிற்துறைகளை, உயர் ஏற்றுமதி கைத்தொழில்களாக மேம்படுத்தல்...

- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆடை தயாரிப்பு கைத்தொழில்களான இறக்குமதியை எளிதாக்க பல சலுகைகள்...

- உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகள்...

- உள்ளூர் உற்பத்தி தொடர்பான செஸ் அமுலாக்கம்...

- சீரான வர்த்தகக் கொள்கையைப் பின்பற்றுவதற்கு நடவடிக்கைகள்...

- ஏற்றுமதி இலக்குகளை அடைய புதிய தூதுவர்களை நியமிக்க நடவடிக்கை...

- ஏற்றுமதியின் பொருட்டு, வெளிநாடுகளின் உதவிகளைப் பெறுவதற்கும், ஏற்றுமதி பொருட்களின் உற்பத்திக்கு அபிவிருத்தியடைந்த நாடுகளில் கிடைக்கும் உயர் தொழில்நுட்பத்தை, பயன்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் கவனம் செலுத்தல்...

- புதிய குடிநீர் திட்டங்களுக்கு ரூ. 75 மில்லியன் வழங்க நடவடிக்கை...

- 3.5 மில்லியன் குடும்பங்களுக்கு புதிய நீர் இணைப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை...

- நாடு முழுவதும் குடிநீர் வழங்க 1,000 திட்டங்களை தயாரிக்க நடவடிக்கை...

- 21 மாவட்டங்களிலும் சிறிய குளங்ககளை புனரமைக்க ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கீடு...

- கின், நில்வளா, மல்வத்து ஓயா நீர் திட்டத்தை விரைவாக நிறைவு செய்ய நிதி ஒதுக்கீடு...

- உமா ஓயா திட்டத்துடன் தொடர்புடைய மின் உற்பத்தி நிலையங்களை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை...

- கிராமப்புற மின்சார விநியோகத்திற்காக ரூ. 750 மில்லியன் ஒதுக்கீடு...

- வழிபாட்டுத் தலங்கள், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களின் கூரைகளில், சூரிய சக்தி மின் கட்டமைப்புகளை அமைப்பதற்கு நடவடிக்கை...

- 100,000 வீடுகளுக்கு சூரிய சக்தி தொகுதிகள்...

- புதுப்பிக்கத்தக்க வலு சக்தி மூலம் தேசிய கட்டமைப்பில் 1,000MW மின்சாரத்தை இணைக்க நடவடிக்கை...

- 2023 இற்குள் மின்சாரத்திற்காக செலவீடுகளைக் குறைப்பதற்கும் வணிகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை...

- ஏராளமான மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது...

- ரூ. 1,000 சம்பளத்தை செலுத்த முடியாத நிறுவனங்களின் ஒப்பந்தங்களில் மாற்றங்களை ஏற்படுத்த உரிய சட்டங்களைத் திருத்துவதற்கு விசேட கவனம்...

- தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ஜனவரி முதல் ரூ. 1,000 ஆக உயர்த்த முன்மொழிவு.

- அதிக மதிப்புள்ள இலங்கை தரக்குறியீட்டு தேயிலை பயிர்ச் செய்கையை மேம்படுத்தி, அதன் அடிப்படை உட்கட்டமைப்புகளை வழங்குவதற்கும் கவனம்...

- தோட்ட கலாச்சாரத்தை மேம்படுத்தி, தேயிலை, தெங்கு, இறப்பர், கறுவா செய்கைக்கு புத்துயிரழித்தல் மற்றும் பன்முகப்படுத்த நடவடிக்கை...

- மர முந்திரிகை கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 6,500 ஏக்கர் நிலத்தில் புதிதாக முந்திரிகை செய்கையை மேற்கொள்ள கவனம் செலுத்தல்...

- கந்தளாய், பதுளை மற்றும் மொணராகலை ஆகிய இடங்களில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு நிவாரணங்கள்...

- தெங்கு நிலங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், தரிசு நெல் வயல்களில் தெங்கு மற்றும் நாரத்தை/ஆரஞ்சு செய்கைக்கு அனுமதி வழங்க நடவடிக்கை...

- தேயிலை செய்கையை மேம்படுத்த விசேட கவனம்...

- மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முழுமையான மறுசீரமைப்பிற்கு, மேலதிகமாக ரூ. 500 மில்லியன் ஒதுக்கீடு...

- மீன் பண்ணை வலயங்களின் அபிவிருத்திக்கு ரூ. 200 மில்லியன் ஒதுக்கீடு...

- கறவை பசுக்களின் பால் உற்பத்தியை அதிகரிக்க பல விசேட நடவடிக்கைகள்...

- பால் உற்பத்தி மற்றும் பண்ணைகளை உருவாக்க வருடாந்த ரூ. 500,000  சலுகைக் கடன்...

- போபத்தலவா மற்றும் ரிதிகம பண்ணைகளை கால்நடை இனப்பெருக்க மையங்களாக மேம்படுத்த நடவடிக்கை...

- மரக்கறிகள் மற்றும் பழங்களுக்கான குளிர்பதனிடல் வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை...

- தேங்காய், இறப்பர் செய்கை நிலங்களில் மஞ்சள், இஞ்சியை பயிரிட நடவடிக்கை...

- மஞ்சள், இஞ்சி இறக்குமதி செய்வதற்கான தடை தொடரும்

- விவசாய உற்பத்தியில் உபரி நிலையை உருவாக்குவதற்கும், மேலதிக இருப்பை பராமரிப்பதற்கும், விவசாய பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்குமான முடிவு தொடரும்...

-  விவசாயத்தில் சேதன உரங்களை பயன்படுத்த விசேட கவனம்...

- ஏனைய பயிர்களுக்கு, ரூ. 1,500 சலுகை விலையில் உரங்களை வழங்க அரசு முடிவு...

- அரிசி, சோளம் உள்ளிட்ட தானியங்களுக்கு உத்தரவாத விலை...

- வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக, திறமையான பயிற்சி பெற்ற தொழிலாளர்களை அனுப்புவதற்கும், வெளிநாட்டு சந்தைகளின் பல்வகைப்படுத்தல் தொடர்பில் கவனம்...

- தொல்பொருள் துறைக்கு மேலதிகமாக ரூ. 250 மில்லியன் ஒதுக்கீடு...

- சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் சலுகைக் கடனை அறவிடுதல் 2020 செப்டெம்பர் 31 வரை நீடிப்பு...

- நகர்ப்புற நடை பாதைகளுக்கு ரூ. 2,000 மில்லியன் ஒதுக்கீடு...

சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்...

தேநீர் விருந்துபசாரத்திற்காக வரவு - செலவு திட்ட வாசிப்பு 30 நிமிடங்கள் ஒத்திவைப்பு...

- விளையாட்டு அபிவிருத்தியில் விசேட கவனம், செயற்கை ஓட்டப்பந்தய தடங்களுடன் 10 விளையாட்டு பாடசாலைகளை நிர்மாணிக்க விசேட கவனம்...

- தங்குமிடம் அல்லாத நகர பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்கப்பதற்கு யோசனை; இதற்காக ரூ. 1,000 மில்லியனை ஒதுக்க முன்மொழிவு...

- மருத்துவ மற்றும் பொறியியல் பல்கலைக்கழக வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை

- தொழிற்கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு 4% வட்டி விகிதத்தில் ரூ. 500,000 கடன் வழங்குவதற்கும், திருப்பிச் செலுத்துவதற்கான ஒரு வருட கால அவகாசம் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிப்பதற்கும் நடவடிக்கை...

- தொழிற்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க மாதத்திற்கு ரூ. 4,000 நிதி ஒதுக்கப்படும்.

- தொழிற்கல்வியில் இணைக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 200,000 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை...

- தகவல் தொழில்நுட்பம், ஆங்கில கல்வி, தொழில்நுட்ப அறிவு கொண்ட மாணவர்களை உருவாக்குவது முக்கிய குறிக்கோள்...

- இளைஞர், யுவதிகளை கவரும் வகையில் தொழில்நுட்ப கல்லூரிகளை நவீனமயமாக்குவதற்கு நடவடிக்கை...

- குழந்தைகளின் கஷ்டங்களைக் குறைத்து, கஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு தொலைக்காட்சிகளை வழங்குவதற்கும், அனைத்து மாணவர்களுக்கும் தொலைதூர கல்வியை வழங்குவதற்கும் நடவடிக்கை...

- பாடசாலைகளுக்கு இணைய சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை...

- கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தொடர்ந்தும் திரிபோஷாவை வழங்குவதற்கு நடவடிக்கை...

- திரிபோஷாவின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1,500 மில்லியன் மேலதிக ஒதுக்கீடு...

- நவீன முதலீட்டு வலயத்தைத் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை...

- கொவிட்-19 காப்புறுதி யோசனை திட்டத்;தை அமைத்து, அதில் அனைத்து ஊழியர்களையும் உள்ளீர்க்க நடவடிக்கை...

- கொரோனா தொற்றுநோயுடன் நாடு முழுவதும் சுகாதார வசதிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை விரிவுபடுத்துவதற்கு ரூ. 18,000 மில்லியன் மேலதிக ஒதுக்கீடு...

- பொதுச் சுகாதாரத்தில் முதலீட்டை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள்...

- பல்வேறு பிரதேசங்களில் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்க நடவடிக்கை...

- எதிர்வரும் இரு ஆண்டுகளில் ஒரு தொழில்நுட்ப நிறுவன பொருளாதாரம்...

- தொலைபேசி அபிவிருத்தி கட்டணத்தில் அதன் அபிவிருத்திக்கு 50% ஒதுக்கப்படும்...

- தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கு, தொலைத் தொடர்பு கோபுர வசதிகளை அதிகரிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது...

- கிராமங்களின் தொலைத்தொடர்பு அபிவிருத்திக்காக ரூ. 15,000 மில்லியன் ஒதுக்கப்படும்...

- தொழில்நுட்ப சுயதொழில் விரிவாக்கத்திற்காக ரூ. 8,000 மில்லியன் ஒதுக்கீடு...

- பொலிஸ் ரோந்துப் பணிகளை விரிவுபடுத்துவதற்கும் பாதுகாப்பு வாகனங்களை ஈடுபடுத்தல் மற்றும் விசேட நடவடிக்கைகள் பலவற்றிற்காக, மேலதிகமாக ரூ. 2,500 மில்லியன் ஓதுக்கீடு...

- இராணுவ வீரர்களுக்கான வசதிகளை வழங்க ரூ. 750 மில்லியன் ஒதுக்கீடு....

- மீன்பிடி சமூகத்தை பாதுகாக்கவும், இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பு வழங்கவும் அரசு விசேட கவனம்...

- முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, சேமிப்பக கிடங்கு வசதிகளை வழங்கும்போது வரி நிவாரணம் வழங்க விசேட கவனம்...

- ஏற்றுமதி சந்தை முதலீடுகளுக்கு உச்சபட்சமாக 10 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை...

- 2021 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு, 50% வரிச் சலுகை...

- பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு விசேட வரி நிவாரணம்...

- நிரந்தர வீட்டு சந்தையை ஊக்குவிக்க விசேட வரி குறைப்பு...

- தனிப்பட்ட சேமிப்பை ஊக்குவிக்க விசேட நடவடிக்கைகள்...

- சமுர்த்தி பெறுநர்களுக்காக 'சமூர்த்தி வாழ்க்கை சேமிப்பு' (சமுர்த்தி ஜீவித இதிரிகிரீம்) எனும் புதிய கணக்கைத் திறந்து அவற்றில் சமுர்த்தி கொடுப்பனவுகளை வைப்பிலிட நடவடிக்கை...

- சட்டவிரோத ஆலோசனைகளை வழங்கும் வரி ஆலோசனை சேவைகளை இரத்து செய்யக்கூடிய புதிய சட்ட விதிகளை அறிமுகப்படுத்த முடிவு...

- அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி அறவிடலின் போது, விசேட கவனம் செலுத்துவதற்கு நடவடிக்கை...

- வரி செலுத்தல் பொறுப்பை சமப்படுத்த எளிய வழியை அறிமுகப்படுத்தல்...

- விசேட வரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அமைக்க முன்மொழிவு...

- 2021 முதல் அனைத்து நிறுவனங்களுக்கும் வரி செலுத்துதல் கட்டாயமாக்கவும், வரி செலுத்துதலில் தேசிய அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தவும் யோசனை...

பிரதமரினால் 2021 வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பம்-PM Mahinda Rajapaksa Begins Presenting Budget 2021 to the Parliament

- 2021 முதல் அனைத்து நிறுவனங்களுக்கும் வரி செலுத்துதல் கட்டாயமாக்கவும், வரி செலுத்துதலில் தேசிய அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தவும் யோசனை...

- மதுபானம் மற்றும் சிகரெட்டுக்கு விசேட கலால் வரி விதிக்க முடிவு...

- அரசாங்கத்தின் தற்போதைய வரிக் கொள்கையை மாற்றாது பேண முடிவு.

- வெளிநாட்டு அபிவிருத்தித் திட்டங்களில் அலுவலக மற்றும் வெளிநாட்டு ஆலோசனை செலவுகளை குறைக்க எதிர்பார்ப்பு...

- வெளிநாட்டுக் கடன்களின் அளவு சுமார் ரூ. 1,600 மில்லியன் ஆகக் காணப்படுகின்றது...

- இளைஞர்களுக்கு புதிய தொழில்களை ஆரம்பிக்கவும், விவசாய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன...

- குறிப்பிட்ட அடையாளம் காணப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு வெளிநாட்டு கடன் நிதிகளை செலுத்துவதில் கவனம்...

- வெளிநாட்டுக் கடன்களால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு உள்ளூர் தேவைகளிலிருந்து வெகு தொலைவில் இருப்பதைக் காணலாம்...

- உள்ளூர் தயாரிப்புகளுக்கு பெறுமதி சேர்க்க ஏற்றுமதியை பல்வகைப்படுத்துவதில் முன்னுரிமை...

- "...இவ்வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் அரசாங்க செலவினங்களுக்கும் வருமானத்திற்கும் இடையிலான இடைவெளியை 9% இலிருந்து 4% ஆக குறைப்பதாகும்."...

- தற்போதுள்ள சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பை சீர்திருத்த வேண்டும் என்பது இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளது...

- அடிமட்ட நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் மக்கள் மையப்படுத்தப்பட்ட பொது சேவை அவசியமென அடையாளம் காணப்பட்டுள்ளது...

- விவசாயத்தின் அடிப்படையில் உற்பத்தி பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்...

- சமூகத்தின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு...

- கல்வி முறையை மாற்றும் சீர்திருத்தங்களில் அரசாங்கம முன்னுரிமை...

- கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம்...

பி.ப. 1:40 வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பம்

பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்‌ஷவினால், 2021 வரவு - செலவுத்திட்ட உரை ஆரம்பம்.


Add new comment

Or log in with...