அரவிந்தகுமார், டயனாவுக்கு அரச தரப்பில் ஆசன ஒதுக்கீடு | தினகரன்

அரவிந்தகுமார், டயனாவுக்கு அரச தரப்பில் ஆசன ஒதுக்கீடு

பாராளுமன்றம் இன்று கூடும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, அரவிந்தகுமார் ஆகியோருக்கும் அரசாங்கத் தரப்பில் ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது.

இவர்கள் இருவருக்கும் அரசாங்க தரப்பில் ஆசன ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு அரச தரப்பு பிரதம கொரடா ஜோன்ஸன் பெர்னாண்டோ முன்வைத்த கோரிக்கையையடுத்தே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தை ஆதரித்த எதிரணி உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கும் அரச தரப்பில் ஆசன ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்‌ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரை ஏற்கனவே கோரியிருந்தார்.

ஏனைய ஆறு எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சித் தரப்பில் தனியான ஆசன ஒதுக்கீடு தற்போதைக்குச் செய்யப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...