ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் Dialog இனால் ICU தொகுதி | தினகரன்

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் Dialog இனால் ICU தொகுதி

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் Dialog இனால் ICU தொகுதி-Dialog Axiata Gifts Fully-functional ICU at Homagama Base Hospital to the Public
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் முழுமையாக செயல்படும் ICU வளாகத்தின் திறப்பு விழாவின் போது பெயர் பலகை அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றது.

சுகாதார அமைச்சின் உதவியுடன், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (டயலொக்) ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் ஒரு முழுமையான செயல்பாட்டுடன் கூடிய 10 கட்டில்கள் கொண்ட அதி தீவிர சிகிச்சை பிரிவை (ICU) பரிசளித்துள்ளது.  இந்த முயற்சி கோவிட்-19 தொற்றுநோய்களின் போது தேசிய சுகாதாரப் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் தற்போதைய உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.

ஏப்ரல் 2020 இல் கோவிட்-19 தொற்றுநோயுடன் தொடர்புடைய சிக்கலான சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக டயலொக் 2000 இலட்சம் ரூபாய் தொகையினை வழங்குவதாக உறுதியளித்திருந்தது. இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரின் உறுதிமொழிக்கு அமைய நீர்கொழும்பு  வைத்தியசாலையில் 10 படுக்கைகள் கொண்ட ICU ஐ முதல் கட்டமாக இயக்க உதவியது. மேலும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிவேக பி.சி.ஆர் பரிசோதனையையும் செயல்படுத்தி பரிசோதனை மற்றும் அறிக்கையிடல் நேரத்தை 8 மணித்தியாலத்திலிருந்து சுமார் 2.5 மணித்தியாலமாக  வெகுவாகக் குறைத்தது.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் Dialog இனால் ICU தொகுதி-Dialog Axiata Gifts Fully-functional ICU at Homagama Base Hospital to the Public

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் முழுமையாக செயல்படும் ICU வளாகம்  நிறுவப்பட்டுள்ளதுடன்  இது கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்களை திறம்பட கையாள சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு வைத்தியசாலையின் திறனை மேம்படுத்துவதற்கான அதிநவீன ICU  உபகரணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ ஊழியர்களின் அழுத்தத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், மேலும் அதி தீவிர சிகிச்சையில் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பதையும் அதே நேரத்தில் மாவட்டத்தில் சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதற்கான ஊக்கியாகவும் செயல்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தின் போது  கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, "சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய டயலொக் ஆசிஆட்டா, உணர்ந்து சேவை செய்யக்கூடிய  ஒரு நிறுவனமாகும். தொற்றுநோயின் ஆரம்பத்தில், கோவிட் -19 ஐ தணிப்பதற்கான நமது தேசிய முயற்சிகளுக்கு எங்களை ஆதரிக்க டயலொக் நிறுவனத்தை அணுகியபோது, டயலொக் நாட்டின் முக்கியமான சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த  அப்போதே 2000 இலட்சம் ரூபாய்க்கான உறுதி மொழியினை வழங்கியது. இந்த உறுதிமொழியானது  நீர்கொழும்பு  பொது வைத்தியசாலையில் 10 படுக்கைகள் கொண்ட ஐ.சி.யு மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் Hi-Speed robotic பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு  வழிவகுத்தது. ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் ICU வளர்ச்சி என்பது இந்த முயற்சிகளின் விளைவாக பலனளித்த சமீபத்திய முயற்சியாகும்இ இதற்காக இலங்கையர்களாகிய நாம் ஒரு தேசமாக இணைந்து மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என தனது உறையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் கௌரவ (டாக்டர்) பந்துல குணவர்தன, பல மக்களுக்கு சிகிச்சையளிக்கும் ஹோமாகம ஆதார வைத்தியசாலை நீண்ட காலமாக காணப்பட்டு வந்த  குறைபாடுகளில் ஒன்றாகிய   ICU  நிறுவப்பட்டுள்ளது. ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இந்த முழுமையாக செயற்படும் ICU ஐ  அறிமுகப்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம். இத்தகைய முன் முயற்சிகளை மேற்கொண்டு அதை மிகவும் சாத்தியமாக்கியமைக்காக   "அரசாங்கத்தின் சார்பாக டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்திற்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் Dialog இனால் ICU தொகுதி-Dialog Axiata Gifts Fully-functional ICU at Homagama Base Hospital to the Public

இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாகி சுபுன் வீரசிங்ஹ தெரிவிக்கையில், “கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் ஒரு முழுமையான செயல்பாட்டுடன் கூடிய 10 படுக்கைகள் கொண்ட ICU ஐ  நிறுவுவதற்கான வாய்ப்பு கிடைத்தமையையிட்டு  மகிழ்சியடைகின்றோம். எங்களுடைய தனித்துவம் மிக்க   சேவைகளின் ஊடாக எமது சமூகங்களை ஒன்றிணைத்து   அத்தகைய சிக்கலான நிலமையினை கடந்து செல்வதற்கு உதவும் வேளையில், இந்த முன் முயற்சியானது  பொது சுகாதார அவசர தேவைகளுக்கு  பதிலளிப்பதற்கு  நமது நாட்டின் திறனை பலப்படுத்தும். எங்கள் வாடிக்கையாளர்களின் விசுவாசம் மற்றும் டயலொக் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அமைய சவாலான நேரத்தில் நம் நாட்டுக்கு உதவ எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு நாங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்” என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, சுகாதார அமைச்சரின் அந்தரங்க செயலாளர் காஞ்சன ஜயரத்ன, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆலோசகர் மயக்க மருந்து நிபுணர் டாக்டர் பந்துல  ஹனங்கல ஆராச்சி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாகி சுபுன் வீரசிங்க, சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ சேவைகள், மேலதிக செயலாளர் டாக்டர் சுனில் டி அல்விஸ், ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜனித ஹெட்டியாராச்சி, Bamunuarachchi அறக்கட்டளை தலைவர், பி எ மஹிபால, சுகாதார அமைச்சசின் மருத்துவ சேவைகள், மேலதிக செயலாளர் டாக்டர் சுனில் டி அல்விஸ், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


Add new comment

Or log in with...