நவம்பர் 14 - 15 பயணிகள் புகையிரதங்கள் இரத்து | தினகரன்

நவம்பர் 14 - 15 பயணிகள் புகையிரதங்கள் இரத்து

நவம்பர் 14 - 15 பயணிகள் புகையிரதங்கள் இரத்து-No Trains On November 14-15-Sri Lanka Railways

எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பயணிகள் புகையிரதங்கள் இயங்காது என, இலங்கை புகையிரத சேவை அறிவித்துள்ளது.

புகையிரத திணைக்கள பொது முகாமையாளர், எம்.ஜே.டி. பெனாண்டோ விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசாங்க விடுமுறை தினங்களான நவம்பர் 14 மற்றும் 15ஆம் திகதிகளில், அனைத்து பயணிகள் புகையிரத சேவைகளையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்த நாளான நவம்பர் 16ஆம் திகதி திங்கட்கிழமை, வழமை போன்று தற்போது சேவையிலுள்ள அனைத்து அலுவலக புகையிரதங்கள் மற்றும் பிரதேச மட்டத்திலான புகையிரதங்கள் அனைத்தும், மீண்டும் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...