அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு-US Presidential Election 2020-Joe Biden Wins

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின், தற்போது வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் 03ஆம் திகதி இடம்பெற்ற இத்தேர்தலைத் தொடர்ந்து. 4 நாட்களாக தொடர்ந்த கத்திமுனை போட்டி இடம்பெற்று வந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதியான குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை வெற்றி பெற்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முடிவை மாற்றக்கூடிய முக்கிய மாநிலங்களிலும் இருவருக்கும் இடையே நெருக்கமான போட்டி நிலவி வந்தது.

538 எலெக்டோரல் கொலேஜ் (தேர்தல் தொகுதிகள்) இல் ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்கு, வேட்பாளர் ஒருவர் 270 கொலேஜ் இல் வெற்றி பெற வேண்டி இருந்தது.

அதற்கமைய ஜோ பைடன் இதுவரை 290 கொலேஜ் இலும், டொனால்ட் ட்ரம்ப் 214 எலெக்டோரல் கொலேஜ் இலும் வெற்றி பெற்றுள்னர்.

இதேவேளை, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், வாக்கெண்ணும் பணிகளை நிறுத்துமாறு தெரிவித்ததோடு, அதனை நிறுத்த உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் தெரிவித்ததோடு, தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்து வந்தார்.

தொடர்ந்தும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...