கிழக்கில் சதத்தை எட்டிய கொரோனா!

கிழக்கில் சதத்தை எட்டிய கொரோனா!-100 COVID19 Cases Identified So Far-Dr-G-Sukunan-Dr-A-Lathaharan

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சதத்தை (100) எட்டியுள்ளது.

இறுதியாக மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப் பிரிவில் மேலும் 4 பேருக்கும் மட்டக்களப்பில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இதுவரை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 13 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 20 பேரும் அம்பாறை பகுதியில் 7 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது .

கல்முனையில் தடை நீக்கப்படவில்லை!
கலமுனைப் பிராந்தியத்தில் வணக்கஸ்தலங்கள் மீதான தடை இன்னும் நீக்கப்படவில்லை என, கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணன் தெரிவிக்கிறார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்னாலோ அல்லது எனக்கு கீழான எந்த ஒரு அதிகாரிகளினாலோ பள்ளிவாசல்களோ, கோவில்களோ, கிறிஸ்தவ தேவாலயங்களோ, விகாரைகளோ மீண்டும் பொதுமக்களுக்காக திறப்பது சம்பந்தப்பட்ட எந்த விதமான புதிய அறிவுறுத்தல்களும் இதுவரை கொடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

அத்துடன் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

(காரைதீவு குறூப் நிருபர் சகா)


Add new comment

Or log in with...