கண் கவரும் OPPO F17 ஐ இலங்கையில் அறிமுகப்படுத்தும் OPPO | தினகரன்

கண் கவரும் OPPO F17 ஐ இலங்கையில் அறிமுகப்படுத்தும் OPPO

கண் கவரும் OPPO F17 ஐ இலங்கையில் அறிமுகப்படுத்தும் OPPO-Hot On the Heels of Launching OPPO F17 Pro-OPPO Sri Lanka Launches OPPO F17

OPPO F17 Pro சுடச்சுட அறிமுகமாகின்றது. OPPO ஶ்ரீலங்கா தனது சமீபத்திய F தொடரான ​​OPPO F17 இனை இலங்கையில் அறிமுகப்படுத்துகிறது. Xinda Lanka (OPPO Sri Lanka) பிரதான நிறைவேற்று அதிகாரியான பொப் லி(Bob Li) கருத்துத் தெரிவிக்கையில், "F தொடரின் மரபணுவைக் கொண்டுள்ள OPPO F17 ஆனது, சிறந்த வடிவமைப்பை இணைத்து, வேகமான சார்ஜிங் மற்றும் தடையற்ற பொழுதுபோக்கு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. தொலைபேசிகள் எப்போதுமே பயனர்களின் கைகளுக்கு எட்டக்கூடிய வகையில் அமைய வேண்டும். அந்த வகையில், உங்கள் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்வதால் உங்கள் கண்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் அம்சங்களின் தொகுப்பை F17 ஒருங்கிணைக்கிறது” என்றார்.

இலகுரக மற்றும் ஸ்டைலான தோல் போன்ற வடிவமைப்பு
தோல் போன்ற பின்புற மேற்பரப்பு மற்றும் கையடக்கத் தொலைபேசியை ஒரு நவநாகரீக மேம்பட்ட அமைப்பாக தோற்றமளிக்கும் வகையில், லேசரினால் பொறிக்கப்பட்ட வடிவமைப்பை கொண்டுள்ளது. OPPO F17 என்பது மிக பாரம் குறைந்த ஸ்மார்ட்போன் ஆகும். இது புதுமை மற்றும் ஆடம்பர உணர்வை வழங்கும் அதே நேரத்தில், பயனர்களுக்கு நேர்த்தியான அமைப்பை கொடுக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது Navy Blue (நீலம்) மற்றும் Dynamic Orange செம்மஞ்சள் ஆகிய இரண்டு வண்ணங்களில் வருவதோடு, இக்கையடக்கத் தொலைபேசி மிகவும் ஸ்டைலானதாகவும், பார்வைக்கு கவரச்சியானதாகவும் அமைக்கப்பட்டுள்ளது..

ஆடம்பர உணர்வை மேம்படுத்தும் மற்றொரு உறுப்பாக, பின்புறம் காணப்படும் பிரதான கெமரா வடிவமைப்பு ஆகும். இது உயர்நிலை கடிகாரங்களின் அமைப்பினால் ஈர்க்கப்பட்ட ஒரு முழுமையான சீரான 2x2 வரிசை வடிவமைப்பைக் கொண்ட 4 கெமராக்களை கொண்டு அமைந்துள்ளது. 2.5D வளைந்த உடலானது, இந்த கையடக்கத் தொலைபேசியை வழக்கமான 3D வளைந்த வடிவமைப்புகளை விட எளிமையான பாணியையும், தட்டையான உடலையும் வழங்குகிறது. இந்த ஒரே துண்டு உடலமைப்பைக் கொண்ட கையடக்க தொலைபேசியானது, புதிய, தனித்துவமான அழகியலை வழங்குவதோடு, பயனர்கள் தொலைபேசியை வைத்திருக்கும்போது அவர்களுக்கு ஒரு சிறந்த உணர்வை வழங்குகிறது. ஸ்டைலான தோற்றத்தை பூரணப்படுத்தும் வகையில், F17 இன் நடுத்தர சட்டகமானது, ஒரு மெல்லிய வடிவமைப்பை உள்ளடக்கியதாகவும், மிகச் சிறியதும் மென்மையான முற்புற தனித்துவமான ஓரச் சட்டக (bezel) அமைப்பின் விளைவாக மெல்லிய மற்றும் இலகுவானதாக உடல் அமையப் பெற்றிருக்கும்.

30W VOOC Flash Charge
F17 இன் 4,015mAh மின்கலமானது(வழக்கமானது) 30W VOOC Flash Charge இனை பயன்படுத்துகிறது. இதன் மூலம் 56 நிமிடங்களில் முழுமையான சாரஜிங்க அல்லது 30 நிமிடங்களில் 72% சார்ஜிங்கை மேற்கொள்ள முடிகிறது. OPPO F17 இனது Super Power Saving Mode போன்ற மின்கலத்தை அதிகம் சேமிக்கும் தொழில்நுட்பத்தையும் வழங்குகிறது. இது மின்கலத்தில் குறைந்த சாரஜ் காணப்படும் வேளையில் சுமார் 17 மணிநேரங்கள் வரையான தொடர்ச்சியான மின்சக்தி சேமிப்பு யுத்தியையும் Super Night-time Standby மூலம் பயனர்களின் தூக்கப் பழக்கத்தை கற்றுக்கொண்டு அதன் மூலம் இரவில் அதிக மின்சக்தி சேமிப்பு மேம்படுத்தலை மேற்கொள்கிறது.

கண்களுக்கு வசதியான வகையில் நன்கு வடிவமைக்கப்பட்ட திரை
திரை தெரியும் நிலையை மேம்படுத்துவதற்காக F17 இன் Sunlight Screen தன்னியக்க முறையில் ஒளியை (brightness) மாற்றியமைத்து இடத்திற்கும், சூழலுக்கும் ஏற்ற வகையில் உங்கள் கண்களுக்கு வசதியான வகையில் அமைகிறது. AI Smart Backlight ஆனது நீங்கள் ஒவ்வொரு நிலையிலும் தெரிவு செய்யும் ஒளியின் அளவை கற்று அதற்கேற்றாற்போல் அந்தந்த நிலையில் மாற்றும். Moonlight Screen  ஆனது தன்னியக்க முறையில் உங்கள் திரைக்கு மிகக் குறைந்த பிரகாசத்தை அமைப்பதோடு, வீடியோக்களைப் பார்க்கும்போது அல்லது சமூக வலைத்தள பயன்பாடுகளின் போது, பயனரின் கண் அழுத்தத்தைத் தணிக்க, F17 இன் DC Dimming தொழில்நுட்பமானது, திரையில் ஏற்படும் மினுமினுப்பு நிலையை நீக்குகிறது. அதிநவீன காட்சியை வெளிப்படுத்தும் வகையில் F17 இன் In-display fingerprint scanner (உள்ளார்ந்த திரை கைரேகை ஸ்கேனர்) ஆனது, பக்கவாட்டிலான அல்லது பின்புற கைரேகை உணரிகளை விட மிக வேகமான மற்றும் துல்லியமான உணரியுடன் மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது.

மிருதுவான மற்றும் அனைத்து வகையான பொழுதுபோக்கு அனுபவம்
Hyper Boost 2.1 செயலிகள் மற்றும் கேம்களுக்கு விரைவாக உணர்வளிப்பதால், முழு தொகுதியும் மிகவும் சீராக இயங்க அனுமதிக்கிறது. 128GB சேமிப்பகத்துடன் கூடிய 8GB நினைவகம் ஆனது, கையடக்கத் தொலைபேசியின் சிறிது நேர பயன்பாட்டில் இருந்தபோதும் கேமிங் அனுபவங்கள் குறைந்த பின்னடைவைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது.

OPPO இன் RAM+ anti-lag (பின்னடைவை தடுத்தல்) மற்றும் OF2FS ஆகியன, தொகுதியில் கிடைக்கக்கூடிய நினைவகத்தை திறம்பட விரிவாக்குவதன் மூலம் வேகத்தையும் செயல்திறனையும் மேம்படுத்துவதோடு, இயங்கும் தொகுதியின் வயதாதலால் ஏற்படும் தாமதத்தை தணிக்கும் போது சேமிப்பக செயல்திறனை மேம்படுத்துகிறது.

OPPO F17 இன் Dual Channel Network Acceleration (இரட்டை வழி நெட்வொர்க் வேகமாக்கம்) Wi-Fi மற்றும் மொபைல் நெட்வொர்க் அதிக நெட்வொர்க் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதோடு, குறிப்பாக Wi-Fi இன் அளவு மிக குறைவாக இருக்கும்போது Bullet Notifications மற்றும் Floating Window Reply ஆகியவற்றின் மூலம், விளையாட்டின் நடுவில் குறுக்கிடுகள் ஏற்படாமலிருப்பதை உறுதிசெய்கிறது..

AI இயங்கும் கெமராக்கள் மூலம் தருணத்தைப் படம்பிடிக்கிறது
F17 இல் உள்ள 16MP பிரதான கெமரா AI Dazzle Color இனால் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது வண்ணங்களை மிகவும் துடிப்பானதாக்குகிறது. அல்லது சுற்றியுள்ள சூழல் பிரகாசம் மற்றும் ஆழமான கற்றல் வழிமுறைகள் மூலம் வண்ணங்களை அடிப்படையாகக் கொண்ட உருவப்படங்களை அழகுபடுத்துகிறது. அதே நேரத்தில் AI Beautification 2.0 உடன் ஒரு தோற்றத்தை தானாக உருவாக்குகிறது. இது தானாகவே கலக்கங்களை நீக்குகிறது, தோல் அமைப்பைத் தக்க வைத்துக் கொள்கிறது, அத்துடன் தெளிவான மற்றும் பிரகாசமான புகைப்படங்களை பெறும் வகையில் பயனரின் தோல் நிறத்தை சரிசெய்கிறது.

மேலும், Front Night Mode ஆனது, மங்கலான சூழல்களில் மிக விபரங்களுடன் தெளிவான செல்ஃபிக்களைப் பெற பயனர்களுக்கு உதவுவதால், F17 இன் Steady Video (நிலையான வீடியோ பயன்முறை) ஆனது, மாறும் காட்சிகளில் நிலையான மற்றும் தெளிவான வீடியோக்களை வெளியிடுவதற்கு இலத்திரனியல் பட உறுதிப்படுத்தலை (Electronic Image Stabilization - EIS) பயன்படுத்துகிறது. மேலும், Soloop வீடியோ எடிட்டிங் செயலி ஆனது, பயனர்கள் ஒரு தொடுகையில் குறும்படங்களை பதிவேற்றும் வகையிலான முழுமையான குறுகிய வீடியோக்களை உருவாக்க உதவுகிறது.

ColorOS 7.2 உடன் மிருதுவாகவும் திறனாகவும் பயன்பாடு
OPPO F17 இல் உள்ள ColorOS 7.2 ஆனது, பயனர்களை மகிழ்விக்கும் நடைமுறை அம்சங்களை வழங்குகிறது. Icon Pull-Down Gesture (ஐகன் புல்-டவுன் சைகை) காரணமாக, பயனர்கள் கையடக்கத் தொலைபேசியைப் பிடித்து கட்டுப்படுத்த ஒரு கை மட்டுமே இருக்கும்போது, திரையின் மேற் பகுதியில் கடினமாக அடையக்கூடிய செயலிகளை திறக்க அனுமதிக்கிறது. 3 விரல் ஸ்கிரீன்ஷொட் அம்சம், எதிர்கால குறிப்புக்காக அல்லது தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் அவர்கள் திரையில் பார்க்கும் உள்ளடக்கத்தை, அவை அதிகளவாகவோ அல்லது குறைந்தளவானதாகவோ இருந்த போதிலும் கைப்பற்ற அனுமதிக்கிறது.

OPPO F17 - 8 GB + 128 GB ஆனது, தற்போது Navy Blue and Dynamic Orange ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. அபான்ஸ், சிங்ககிரி, டயலொக், டாராஸ் ஒன்-லைன் ஸ்டோரில் ரூ. 54,990 எனும் சில்லறை விலையில் கிடைப்பதோடு, எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதி வரை அதன் அனைத்து கொள்வனவுக்கும் நாடு முழுவதும் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட OPPO முகவர்களிடமிருந்தும் இலவச OPPO தரக்குறியீட்டுடனான டீ-ஷேர்ட்டுகளை பெற முடியும்.

About OPPO Sri Lanka
முன்னணி ஸ்மார்ட்போன் நாமமான OPPO, அதன் முதலாவது ஸ்மார்ட் போனான “Smiley Face” (“ஸ்மைலி பேஸ்”) ஐ 2018 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது. இன்று, OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு Find மற்றும் R தொடர்களின் கீழான பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது, ColorOS இயங்குதளம், அதே போன்று OPPO Cloud மற்றும் OPPO + போன்ற இணைய சேவைகள். OPPO, 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் இயங்குகிறது. உலகளாவிய ரீதியில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 4 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அத்துடன் லண்டனில் ஒரு சர்வதேச வடிவமைப்பு மையத்தையும் கொண்டுள்ளது. OPPO இன் 40,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்வியலை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர்.


Add new comment

Or log in with...