அபுதாபியிலிருந்து 6 பேர்; கட்டாரிலிருந்து 12 பேர் வருகை | தினகரன்

அபுதாபியிலிருந்து 6 பேர்; கட்டாரிலிருந்து 12 பேர் வருகை

அபுதாயிலிருந்து 6 பேர்; கட்டாரிலிருந்து 12 பேர் வருகை-6 From Abu Dhabi-12 From Qatar Returned and Sent to Quarantine Centre

இன்று (31) காலை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியிலிருந்து 6 பேரும்,  கட்டாரின், டோஹாவிலிருந்து 12 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

அபுதாபியிலிருந்து EY 264 எனும் விமானம் ஊடாக 06 பேரும், டோஹா, கட்டாரிலிருந்து QR 668 எனும் விமானம் ஊடாக 12 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

இவ்வாறு நாடு இலங்கை வந்தடைந்த அனைவரும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று (30), ஜப்பானில் இருந்து வந்த UL 455 விமானம் மூலம் 18 பேர் இலங்கை வந்தடைந்திருந்தனர். குறித்த நபர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...