தனிமைப்படுத்தப்பட்ட 508 பேர் இன்று வீடுகளுக்கு

தனிமைப்படுத்தப்பட்ட 508 பேர் இன்று வீடுகளுக்கு-508 Persons Left From Quarantine Centres

- இதுவரை 5 இலட்சம் PCR சோதனைகள்; நேற்று 12,106 சோதனைகள்

முப்படையினரால்‌ நிர்வகிக்கப்படும்‌ தனிமைப்படுத்தல்‌ நிலையங்களில்‌ இருந்து இன்று (31) 508 பேர்‌ வீடு திரும்பவுள்ளதாக‌, கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பின்வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 508 பேரும் இன்று வீடு திரும்புகின்றனர்.

  • நிபுண பூஸா 5 பேர்
  • ஹபராதுவ பொலிஸ் கட்டடம் 4 பேர்
  • வஸ்கடுவ சிற்ரஸ் ஹோட்டல் 2 பேர்
  • கொக்கல ரிசோர்ட் 28 பேர்
  • ஈடன் காடன் ஹோட்டல் 71 பேர்
  • ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் 2 பேர்
  • தியத்தலாவை MRS 32 பேர்
  • தியத்தலாவை விடுமுறை பங்களா 2 பேர்
  • பேராதனை ஆசிரியர் கலாசாலை 110
  • பொல்கொல்லை கூட்டுறவு நிலையம் 23
  • பல்லேகல விவசாய பயிற்சி நிலையம் 7 பேர்
  • பெரியகாடு 34 பேர்
  • கோப்பாய்‌ ஆசிரியர்‌ பயிற்சிக் கலாசாலை 178

அந்த வகையில், முப்படையினரால் நடாத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இன்று (31) வரை 60,079 நபர்கள் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 60 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5,760 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், நேற்றையதினம் (30) மாத்திரம் 12,106 PPR சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, இதுவரை இலங்கையில் 502,669 PCR சோதனைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை நேற்றையதினம் (30) குணமடைந்த மருத்துவமனைகளில் இருந்து வெளியேறிய 140 பேரில் 3 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் எனப்தோடு, ஏனைய 137 பேரும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தணியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...