காட்டு யானையின் தாக்குதலில் வயோதிப பெண் பலி

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹலகம பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (29) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண், கஹட்டகஸ்திகிலிய-மீமின்னாவல ,இஹலகம பகுதியைச் சேர்ந்த சுத்தாகே விமலாவத்தி (64) எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுக்கு அருகில் சத்தம் கேட்டதையடுத்து கதவைத் திறந்து வெளியே செல்ல முற்பட்டபோது முன்னால் நின்ற யானை தூக்கி வீசியதாகவும், அதனை அடுத்து அவ்விடத்திலேயே அப்பெண் உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் சடலம் தற்பொழுது சம்பவ இடத்தில் இருப்பதாகவும் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...