அரச சேவைகளை தடையின்றி முன்னெடுக்குமாறு ஆலோசனை

நிறுவனத் தலைவர்களுக்கு அரசாங்கம் அறிவுரை

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் அதற்கமைவாக ஏனைய அரச சேவைகளும் தடையின்றி முன்னெடுப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவை, மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ரத்னசிறியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

‘அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் அதற்கமைவாக ஏனைய அரச சேவைகளையும்  தடையின்றி நடத்தி செல்லும் தேவை ஏற்பட்டுள்ளது.

தற்போது உள்ள நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடன் கடமைகளை ஆக கூடிய வகையில் நிறைவேற்றுவதில் அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று இதன் மூலம் வலியுறுத்துகின்றேன்.

கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரச நிறுவனங்களின் பிரதானிகளினால் கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனைகளை உள்ளடக்கி ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட 2020 ஏப்ரல் 18 திகதி மற்றும் 2020 மே மாதம் 14 ஆம் ஆகிய சுற்றறிக்கைகளில் கவனம் செலுத்தி அந்த சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய ஊழியர்களை சேவைக்கு அழைத்தல் மற்றும் நிறுவனங்களை நடத்தி செல்வதுடன் அந்த சுற்றறிக்கைகளில் குறிப்பிட்டபடி அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்புக்காக கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


Add new comment

Or log in with...