பொத்துவிலில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உலருணவு | தினகரன்

பொத்துவிலில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உலருணவு

பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 35க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுகாதார பிரிவினரின் ஆலோசனையுடன் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் என்பன வீடுகளுக்குச் சென்று பொத்துவில் பிரதேச செயலக அதிகாரிகளால் வழங்கப்பட்டு வருவதாக, பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த வாரம் முதல் கொரோனா தொற்றுடைய 7 நபர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பொத்துவில் பிரதேசத்தில் ஜந்து கிராமங்கள் முடக்கப்பட்டு சுகாதாரப் பிரிவினர் பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் கண்காணிப்பில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், பொத்துவில் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 35க்கும் மேற்பட்ட  வறிய குடும்பங்களுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் கண்காணிப்பின் ஊடாக உலர் உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் தேவை ஏற்படும் குடும்பங்களுக்கு குடிநீரும் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(திருக்கோவில் தினகரன் நிருபர் - எஸ்.கார்த்திகேசு)


Add new comment

Or log in with...