புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் தலா 9 மணி நேரம் திறப்பு | தினகரன்

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் தலா 9 மணி நேரம் திறப்பு

புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மொத்த விற்பனை நிலையங்கள் நாளாந்தம் அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்க பணிக்கப்ட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மொத்த விற்பனை நிலையங்களில் 50 சதவீதமான ஊழியர்களின் பங்களிப்புடன் மேற் கொள்ளப்படுவதாகப் புறக்கோட்டை மொத்த விற்பனை தொ ழிற்சங்க செயலாளர் தெரிவித்தார்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர்ச்சியான மேற் பார்வையின் கீழ் வர்த்தகம் சுகாதார வழிகாட்டல் படி மேற்கொள்ளப்படுகிறது என்றும், மொத்த விற்பனை நிலையங்களில் எந்தவிதமான பற்றாக்குறையும் இல்லாமல் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கையிருப்பில் உள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...