இன்று நள்ளிரவு முதல் திங்கள் வரை மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு

மேல் மாகாணம் முழுவதற்குமான தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று 29ம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

மேற்படி தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கட்கிழமை 02 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதற்கிணங்க, தற்போது கம்பஹா மாவட்டம் மற்றும் மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

மேல் மாகாணத்திற்கான ஊரடங்குச் சட்டம் திங்கட்கிழமை காலை நீக்கப்படும் நிலையில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு பெருமளவு அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு மேலும் பல பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைவாக ஹோமாகம, மொரட்டுவை, பாணந்துறை வடக்கு மற்றும் பாணந்துறை தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துவகைகளை கொள்வனவு செய்வதற்காக வாரத்திற்கு இரண்டு நாட்கள் அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும்.

அத்துடன் கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்.

காலை 8.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை வர்த்தக நிலையங்கள் திறந்திருக்குமென்றும் அவர்மேலும் தெரிவித்தார்.(ஸ)

செய்ய வேண்டிய அவசியம் கிடையாது எனக் குறிப்பிட்ட அவர், திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவது உறுதியென்றும் தெரிவித்தார்.

மேல் மாகாணத்திற்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மருந்துகள் ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்காக இன்று 29 ஆம் திகதி காலை 8 மணிமுதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை வர்த்தக நிலையங்களும் மருந்தகங்களும் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதிக்குப் பின்னர் இதற்கு முன்னர் அறிவித்திருந்தபடி குறிப்பிட்ட மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலுள்ள பிரதேசங்களில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...